அஸ்ஸலாமு அலைக்கும்

Wednesday, 21 December 2011

தரீகத்திற்கு முரணாக உள்ளவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்,


தரீகத்திற்கு முரணாக உள்ளவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும், நபிமார்களின் வருகை ஷிர்க் இணைவைப்பதை விலக்கவும், ஷிர்க்குடைய அமல்களை நீக்கவும், தெளஹீதையும், தெளஹீது சம்பந்தப்பட்ட அமல்களை தரிப்படுத்துவதற்காகவுமேயாகும். நபிமார்கள் மக்களுக்கு ஷிர்க்குடைய செயல்களை விலக்கி தெளஹீதை போதித்தார்கள்.
இன்று நாம் மஃபூதியத் (வணக்கத்தில்) இணை வைப்பதையும், இஸ்தியானத்(உதவிதேடுவதிலும்) இணைவைப்பதை பகிரங்கமாக விளங்கியிருக்கின்றோம்.
மக்களின் பொதுவான எண்ணம் வணக்கத்தில் இணைவைத்தல் என்பது அவுலியக்களின் அடக்கஸ்த்தலங்களுக்கு செல்வது, ஷாத்த பஞ்ஜா எடுப்பதும், உதவி தேடுவதில் கியார்வின், ஜண்டா, கொடி போன்றவையும், அல்லாஹ் அல்லாதவற்றிக்காகநேர்ச்சை செய்வதும், எடுத்துக்காட்டாக கூறப்படுகின்றது, இவைகள் ஜாஹில் அறிவு ஞானமற்ற ஜனங்கள் உண்டாக்கியவை.
நாம் சிந்திக்கவேண்டும் நாயகம்(ஸல்) அவர்கள் சஹாப பெருமக்களை எப்பொழுது ஷிர்க்கை விட்டும் ஷிர்க்குடைய செயல்களை விட்டும் தடுத்தார்களோ, அப்பொழுது தர்காக்களோ, கொடிகளோ இருக்கவில்லை, அப்படியிருக்க சிலை வணக்கம், விக்ரக ஆராதனைகளை விட்டும் தெளபா செய்துவிட்ட சஹாபா பெருமக்களை  நபி(ஸல்) அவர்கள் எந்த ஷிர்க்கை விட்டும் தடுத்தார்கள்?
நபி(ஸல்) அவர்கள் காபிர்கள், முஷ்ரிகீன்களை மட்டுமே ஷிர்க்கை விட்டு தடுத்தார்கள் என்று யாரேனும் விபரமறியாமல் கூறினால் குர்ஆன் அவர்களுக்கு பதில் கூறுகிறது, "எவர்கள் ஈமான் கொண்ட பிறகு தங்களுடைய ஈமானில் அநீதத்தை கலக்கவில்லையோ அவர்களுக்கே (நிம்மதி) கார்மானம் இருக்கிறது. அவர்களே நேர்வழி பெற்றோர் ஆகும்."
இந்த ஆயத்தில் கூறப்பட்ட அநீதம் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கமளிக்கும் போது ("இன்னஷ்ஷிர்க லலுல்முன் அலீம்") நிச்சயமாக இணைவைப்பதாகிறது மிகப் பெரிய அநீதம் ஆகும், என்ற ஆயத்தை ஒதி விளக்கமளித்தார்கள், இவ்வாயத்தில் மிகப்பெரிய அநீதம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது ஈமான் கொண்டப்பின் ஏற்படும் ஷிர்க் என்ன என்பதுதான்!
இந்த இடத்தில் யோசிக்க வேண்டும், குர்ஆனில் அல்லாஹ் கூறும் நிம்மதி யாருக்கு? , சுபச்செய்தியும் யாருக்கு? ஈமான் கொண்ட நாம் செய்யும் ஷிர்கானவை என்ன? ஈமான் கொண்ட நமக்கு அல்லாஹ்விற்க்கு இணைவைக்காதீர்கள் என்ற எச்சரிக்கை ஏன்? சிந்திக்க வேண்டாமா? எது ஷிர்க், எதில் ஷிர்க், ஆராய்ந்து அறிய வேண்டாமா? இதற்கான விளக்கம் தாங்களுக்கு தர அல்லாஹ் நாடினால் நிச்சயமாக காமிலான ஷெஃய்கின் சவாசத்தை உங்களுக்கு ஏற்படுத்துவான். மேலும் நிச்சயமாக காமிலான ஷெஃய்கின் மூலமே இதற்கான விளக்கத்தையும் பெற முடியும்.
கண்ணியமிக்க ஷெய்ஃகு ஹக்கீமீ ஷா பைஃஜி அவர்களின் ஃபைஜானைக் கொண்டு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமீ

2 comments:

  1. நல்லதொரு விளக்கம்...இதை பிறருக்கு எத்திவைப்பது அல்லாஹ் உங்களுக்கு நன்மை அளிப்பான் தொடருங்கள்...

    ReplyDelete
  2. எது இணைவைப்பு என்பது தெரியாதவன் பெயரலவில் மட்டும் முஸ்லிம் . எது ஷிர்க் என்று அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ தராத விளக்கத்தையா உங்கள் ஷெய்ஃகு சொல்லிடுவார்?
    நீங்கள் குரானை படித்தாலே போதுமே.இதற்கு ஏன் ஷெய்ஃகு?
    அவனுக்கு நிகராக யாரும்(எதுவும்,எதும்) இல்லை(குரான் 112:4)

    ReplyDelete