முன்னிலை வாய்ந்த தொழுகை பற்றி நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகின்றர்கள், "தொழுகை முஃமினானவர்களுக்கு மிஃராஜாக இருக்கின்றது," மிஃராஜ் என்பது என்னவெனில் ஸாலிக் தொழுகையில் நின்ற நிலையில் அவரின் மனம் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் நிலைத்து விடுவதாகும், எனவே தொழுகையில் முன்னிலை வளருகின்றது, ஸாலிக்கிற்கு முன்னேற்றம் கிடைக்கின்றது, ஸாலிக் அல்லாதவர்களின் தொழுகையில் என்ன முன்னேற்றம் கிடைக்கும்? அவர்கள் வழக்கமான ஒரு அமலை நிறைவேற்றுகின்றர்கள். அதனால் நன்மை கிடைக்கும் என ஆதரவு வைக்கலாம், மன ஒர்மையற்ற தொழுகையில் முன்னேற்றம் எங்கே? அல்லாஹ்வின் சன்னிதானம் எங்கே? ஏற்றுக் கொள்வது எங்கே? வழக்கமான தொழுகைக்கும் ஆஷிக்கின் தொழுகைக்கும் வானம் பூமிக்குள்ள வித்தியாசம் உண்டு. மறதியுடையவனும் ஒர் அடியான் தானா? அவனது தொழுகை குறைவுடையது, ஈமான் குறைவுடையது,
ஸாலிக் எப்போதும் அல்லாஹ்வை மறந்தவராய் இருப்பதில்லை; அவரின் தொழுகை நிறைவுடையது; வணக்கம் நிறைவானது; ஈமான் நிறைவுடையது; மறந்தவன் உலகம் மற்றும் நஃப்ஸில் சிக்குண்டவனாய் இருக்கின்றான், ஸாலிக் அல்லாஹ்வின் பிரியத்தில் சிக்கியவர்களாய் இருக்கின்றார்கள். எப்போதும் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் இருக்கின்றார்கள். எனவே ஸுலூக் எனும் வழியில் முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். அடியானுக்கு அல்லாஹ்வின் நிரந்தர முன்னிலை கிடைக்கவும், அல்லாஹு தஆலாவின் சன்னிதானத்தில் நெருக்கம் கிடைக்கவும் முயற்சி அவசியம்.
No comments:
Post a Comment