அஸ்ஸலாமு அலைக்கும்

Friday, 2 December 2011

திக்ரே கல்பீயின் முறை


 திக்ரே கல்பீயின் முறை
மூரீது "அல்லாஹ்" என்ற வார்த்தையை நாடித் தன் மனதால் சொல்கின்றார், இப்படி திருப்பித் திருப்பி அடிக்கடி அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதால் கல்பு இந்தத் திருப் பெயரைப் பிடித்துக் கொள்கிறது, பின்பு கல்பு தானாகவே அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்ல ஆரம்பிக்கின்றது. பின்னர் தூக்கத்திலும், விழிப்பிலும் ஆக எல்லா நிலைகளிலும் தானாகவே அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றது. தன் கல்பு அல்லாஹ் என்று சொல்வதை மூரீது உணர்ந்து கொள்ள முடியும்,நாவு அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்வதைப் போலவே கல்பும் அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்கிறது. தானாகவே நிரம்ப ஆவலோடும் பிரியத்தோடும் அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றது, அல்லாஹ் என்று சொல்வதில் நாவு அசைவதைப் போன்று மனமும் அல்லாஹ் என்று சொல்லும் போது அசைய ஆரம்பிக்கின்றது, கல்பு அல்லாஹ் என்று சொல்வது வெளிப்படையாகத் தெரிகிறது, ஆனால் கல்பின் அமலைப் பிறரால் தெரிந்து கொள்ள முடியாது. திக்ரு செய்பவரே தெரிந்து கொள்வார், சில சந்தர்பங்களில் மனம் அல்லாஹ் என்று சொல்கின்ற சப்தம் மற்றவர்களுக்கும் கேட்கும் இந்த நிலை தற்செயலாக ஏற்படுகிறது, தொடர்ந்தோ நாம் விரும்பிய நேரத்திலோ ஏற்படுவதில்லை

No comments:

Post a Comment