திக்ரு--தவஜ்ஜுஹ்--ஒரு வேறுபாடு
திக்ரு, தவஜ்ஜுஹ் இவ்விரண்டுக்குமிடையே வானம் பூமியின் வித்தியாசம் உண்டு, திக்ரு என்பது தூரத்தில் இருப்பவர்களை நினைப்பது, தவஜ்ஜுஹ் என்பது முன்னிலையில் ஏற்படுகிறது. இந்த பரிபூரணமான முன்னிலைக்குதான் ஸுலூக் எனும் ஞான வழியில் அல்லாஹ்வின் முன்னிலை அல்லாஹ்வின் அண்மை என்றும் இஹ்சான் என்றும் சொல்கிறார்கள், அல்லாஹ்வைப் பார்க்கும் ஸ்தானமும் இதுவே, இந்த பார்வையில் ஆயிரக்கணக்கான திரைகள் இருக்கின்றன, எந்த அளவு பார்வையில் திரைகள் நீங்குமோ அந்த அளவுக்கு அல்லாஹ்வைப் பார்க்கும் அளவும் அதிகப்பட்டுக்கொண்டே இருக்கும். அதே அளவு திரைகள் மேலும் தெரியவும் செய்யும், இதே நிலை வயதெல்லாம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். திரை நீங்கிக்கொண்டே இருக்கும், முடிவில் அடியான் கூறுவான், "யா அல்லாஹ் உன்னை நான் எந்த முறையில் தெரிந்து கொள்ள வேண்டுமோ அம்முறையில் தெரிந்து கொள்ள முடியாதவனாய் இருக்கின்றேனே!
உன்னை நான் எப்படி வணங்க வேண்டுமோ அப்படி வணங்க முடியாதவனாய் இருக்கிறேன், எனக் கூறுவான். இந்த பார்வையில் எந்த அளவு முன்னேற்றம் ஏற்படுகிறதோ அந்த அளவு அடியானில் ஆசையும், இன்பமும் அதிகப்பட்டுக் கொண்டே இருக்கும். முன்னிலையில் இருந்து சந்திக்கும் ஆவல் அதிகப்பட்டுக் கொண்டே போகும். அல்லாஹ்வின் அண்மை இன்பம் காரணமாக உலகத்தின் எல்லா இன்பங்களும் ஒன்றுமில்லாததாகவே தோற்றமளிக்கும். ஆதலால் அந்த இன்பம் இவன் மீது சவாரியாகி, இதோ ஏக்கத்தில் ஜீவிப்பது, மரிப்பது, உண்பது, சம்பாதிப்பது, உறங்குவது, விழிப்பது எல்லாம் அவனுடைய தரிசனத்திலேயே கழியும், அவனுக்கு யாருடைய தேட்டமும் இராது, தேட்டம் இருக்கின்றதெனில் அல்லாஹ்வின் பொருட்டாலேயே அது இருக்கும்
No comments:
Post a Comment