உலக திக்ரு……
மன நாட்டம் மேலும் மேலும் சக்திவாய்ந்ததாக ஆகி மேலும் வளர்ந்து உடல் பூராவிலும் பரவி பூரா உடலோடும் திக்ரு செய்கிறது, இதே போன்று பூரா உலகத்தையுமே திக்ரு செய்ய வைத்து விடுகின்றது, எல்லா உலகமும் திக்ரு செய்பவருடன் சேர்ந்து உலகத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் திக்ரு செய்கின்றது,
கலீஃபத்துல்லாஹ்.....
இதுவே கலீஃபத்துல்லாஹ்-- அல்லாஹ்வின் பிரதிநிதித்துவ மகிமையாகும். இந்த நாட்டம், நாட்டத்தின் செயல், அதன் நிகழ்வை மற்றவர் மீது செலுத்துவது ஆகியவற்றை மனித வர்க்கத்துக்கு மட்டுமே அல்லாஹு தஆலா அருளியுள்ளான், வேறு எந்த படைப்பிற்கும் நாட்டமெனும் இம்மாபெரும் சக்தியை வழங்கவில்லை, ஆதலால் அல்லாஹ்வின் நேசர்கள்தாம் அல்லாஹ்வின் (கலீஃபா) பிரதிநிதிகள் ஆவர். இவர்கள் தாம் எல்லா உலகத்தையும் தங்கள் நாட்டத்துக்குள் சிக்க வைத்திருக்கின்றார்கள்.
குர்ஆனில் அல்லாஹ் தஆலா ஹஜ்ரத் தாவூத்(அலை) அவர்களைப் பற்றி, "மலைகளே, பறவைகளே, தாவுத் (அலை) அவர்களுடன் நீங்களும் திக்ரு செய்யுங்கள்" என்று கூறுகின்றான். ஸாலிகின்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள சுவர், வாசல், மரம், கல், இதழ், பூ பறவை, மிருகம் முதலிய எல்லாமே அவர்களுக்கு சலாம் சொல்கின்றன. அவர்களின் பாதம், எங்கு செல்கின்றதோ அங்கே ஒளியும் பரக்கத்தும் வந்துவிடுகின்றன. அந்த இடம் எப்பொழுதுமே பாக்கியம் பெற்றதாக ஆகிவிடுகிறது.
No comments:
Post a Comment