அஸ்ஸலாமு அலைக்கும்

Saturday, 17 December 2011

நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே பர்ளாக.......


அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான், "நபியே! மனிதர்களை நோக்கி நீர் கூறும்,
              "நீங்கள் மெய்யாகவே, அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருந்தால், நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; உங்களை அல்லாஹ் நேசிப்பான்" (3:31)
திக்ரு, ஃபிக்ரு, ஸுலூக், அல்லாஹ்வின் மீது அன்பு ஏற்பட்டால், அந்த அல்லாஹ்வின் அன்பிற்கு, நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே பர்ளாக இருக்கின்றது. அப்போதுதான் அந்த அன்பை அன்பென்று சொல்ல முடியும், ஷரீஅத்தை கடைப்பிடிக்காமல் காட்டும் அன்பு, அன்பாக இருக்க முடியாது, அல்லாஹு தஆலா தன்னுடைய பிரியத்தையும், அதை வெளிப்படுத்தும் முறைகளையும், நாயகம்(ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றுவதில்தான் வைத்திருக்கின்றான்.
அதிகமானவர்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் என்னவெனில், திக்ரில் முன்னிலை வகிக்கின்றார்கள், அல்லாஹ்வின் தவஜ்ஜுஹ்-சிந்தனையிலும் முன்னிலையில் இருக்கின்றார்கள், அதானல் தரீக்காவின் பீர்மார்கள் இவ்வழியில் அவர்களுக்கு இஜாஸத்தும், கிலாஃபத்தும் கொடுத்து விடுகின்றார்கள். எனினும், ஷரீஅத் விஷயத்தில் அவர்களைப் பார்த்தால் ஷரீஅத்திற்கு விரோதியைப் போல் தோற்றமளிக்கின்றார்கள், ஷரீஅத்திற்கு முக்கியமளிப்பதில்லை, ஆனால் ஷரீஅத்தில்தான் அல்லாஹு தஆலாவின் அன்பும், தரீக்கத்தும், மஃரிபத்தும், ஹகீகத்தும் இருக்கின்றன. ஷரீஅத்தை விடுத்து தரீகத், மஃரிபத், ஹகீகத் எதுவுமில்லை. (பாதின்) அந்தரங்கத்தின் எல்லா முயற்சிகளும் அல்லாஹ்வின்பால் தவஜ்ஜுஹ்-சிந்தனை செய்வதின் எல்லா முன்னேற்றங்களுமே மஃரிபத் கிடைக்கவேண்டும்.என்பதற்காகவே இருக்கின்றன, ஏனென்றால் மஃரிபத்-அல்லாஹ்வை அறிவதன் மூலம், தொழுகையும், ஷரீஅத் முறைப்படி மற்ற அமல்களும் வந்துவிடவேண்டும்.
தரீக்கத்தில் முயற்சி செய்வதெல்லாம் தரீக்கத்தின் படி தொழுகை வந்துவிடவேண்டும் என்பதற்கேயாகும், ஷரீஅத்தின்படி அமல் வந்துவிடவேண்டும் அதில் ஷரீஅத்படி அமல் செய்யவேண்டும் வெறும் மஃரீபத், தரீகத், ஹகீகத்தினாலேயே எல்லாம் ஆகிவிடும் என்றிருந்தால் நாயகம்(ஸல்) அவர்களுக்கு ஷரீஅத் கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது, அதற்கு பகரமாக சன்னியாசியான துறவறத்தன்மை கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும், இதுதான் அசல் வாழ்க்கை எனவும் சொல்லப்பட்டிருக்கும், நாயகம்(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள், இஸ்லாத்தில் துறவறம் இல்லை;    ஷரீஅத்தை பின்பற்றுவதே இஸ்லாமாக இருக்கின்றது, இதுவே அசல் தீனாகவும் இருக்கின்றது. ஈமானாகவும் இருக்கின்றது, இதில்தான் துன்யா மற்றும் ஆகிரத்தின் வெற்றி இருக்கின்றது. அல்லாஹு தஆலா தெளிவாக கூறியுள்ளான்; நீங்கள் என்னை நேசிப்பதாக தாவாச் செய்தால் அதற்கு அடையாளம் நாயகம்(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதேயாகும்.
(ஷைகு ஹக்கீமி ஷாவின் ஃபைஜானைக் கொண்டு---ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)

No comments:

Post a Comment