அஸ்ஸலாமு அலைக்கும்

Tuesday, 13 December 2011

மரணத்தை கண்டு அச்சப்பட்டே ஆக வேண்டும்.


ஆரம்பத்தில் மனிதனின் நப்ஸ் அம்மாராவாக இருக்கின்றது, மனதால் திக்ரு செய்வதால் நப்ஸ் அம்மாரா மாறி, நப்ஸ் லவ்வாமா ஆகிவிடுகிறது. மேலும் திக்ரை தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் லவ்வாமா மாறி முத்மயின்னா திருப்தியடைந்ததாக ஆகிவிடும். இந்த நிலை பாவத்தின் பக்கம் செல்வதில்லை. அதற்கு பதிலாக அல்லாஹ்வின் திக்ரைக் கொண்டு நிம்மதி அடைந்துவிடும். இம்மை, மறுமை இரண்டும் நிம்மதியுடையதாக இருக்கும்.

செய்கு அவர்கள், தாங்களும் முழுமையாக நப்ஸை வசப்படுத்தி, தனது முரிதுகளின் நப்ஸையும் முரிதுகள்  தன் வசப்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றர்கள்.
நபிமார்களுக்கும் நஃப்ஸ் இருக்கிறது ஆனால் அல்லாஹுவின் முழுமையான அருள் இருப்பதால் அவர்களை நஃப்ஸ் கெடுதியின் பக்கம் தூண்ட முடியாது, அல்லாஹ் அவர்களை பாதுகாக்கின்றான்.
இன்ஷா அல்லாஹ் நாமும் செய்கின் வழிகாட்டலை முழுமையாக கடைபிடித்து அல்லாஹ்வின் சிந்தனை, ஞாபகம், (திக்ரு) சாதாகாலமும் கொண்டவர்களாக வாழ்ந்து முழுமையாக திருப்தியடைந்த நஃப்ஸ் உடையவர்களாக நாம் அல்லாஹ்வின்பால் செல்ல ஆசை கொள்ளவேண்டுமே தவிர இந்நிலையில்லாமல் இருக்கும் நிலையில்  நிச்சயமாக நமது மரணத்தை கண்டு அச்சப்பட்டே ஆக வேண்டும்.
நிச்சயமாக நாயகம் (ஸல்) அவர்களின் (தவஜ்ஜுஹ்) கவனிப்பு நிலை, செய்கின் மாறலாக நம்மீது ஏற்பட்டுள்ளதால் அல்லாஹ் நம் அனைவருக்கும்,... நம்முடைய (தவ்ஜ்ஜுஹ்) நம்மை சூழ்ந்து வாழும் அனைத்து முஸ்லிம்களின் மீது ஏற்படுவதால், அவர்களுக்கும், முழுமையான திருப்தியடைந்த நஃப்ஸ் அடையப்பட்டவர்களாக, எல்லாம் வல்ல நாயன் அருள் புரிவானக, ஆமீன்.        
(ஷைகு ஹக்கீமி ஷாவின் ஃபைஜானைக் கொண்டு---ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)

No comments:

Post a Comment