அஸ்ஸலாமு அலைக்கும்

Friday, 2 December 2011

ஒரு மூரீதின் மனப்பக்குவம்.....


ஒரு மூரீதின் மனப்பக்குவம் குறைவாக இருந்தால் அவரது மனம் தாமதமாக மனத்தூய்மை அடைகின்றது, இந்த மனப் பக்குவத்தை பொருத்துத் தான் அல்லாஹ்வை முஷாஹதா செய்யும் நிலையை அடைகின்றார்கள்.
மனப் பக்குவம் எவரிடத்தில் அதிகமாக இருக்கின்றதோ, அவரின் மனம் நாயகம்(ஸல்) அவர்களின் கவனத்தை அதிகமாக கிரகித்துக் கொள்கின்றது, அதன் மூலம் அதிகமான பரிசுத்தத்தை அடைத்து அதிகமாக அல்லாஹ்வின் முஷாஹதாவை பெற்றுப் பலனடைகின்றன. நாயகம்(ஸல்) அவர்களின் தவஜ்ஜுஹ்-கவனத்தைப் பரிபூரணமான முறையில் ஈர்த்து உடனே மனத்தூய்மை பெற்று முஷாஹதாத்- அல்லாஹ்வைப் பார்க்கும் விஷயத்தில் இடைப்படுகின்ற ஆயிரக்கணக்கான திரைகளை நீக்கி அல்லாஹ்வின் தரிசனத்தைப் பெற்றுக்கொள்கின்றன, இந்த செல்வம் தனது சாமர்த்தியத்தால் பெற்றதல்ல, இது அல்லாஹ்வின் கொடுப்பினையன்றி வேறில்லை, எனவே இவ்வழியில் பெரியார்கள் மீது பொறமைகொள்வது வீண், அல்லாஹ்வின் விதியைப் பொருந்தி அதன் மீது நன்றி செலுத்தி வரவேண்டும்.

No comments:

Post a Comment