பீரானவர் சிறிது சிறிதாக முரீதில் திக்ரை அதிகப்படுத்துகிறார்கள், முரீதின் சக்திக்குத் தகுந்தவாறு முன்னோற்றமடைய செய்கின்றார்கள், அதனால் உடல் பூராவும் திக்ரு நடந்தாலும் அதனால் சிரமம் தெரியாது. ஆனால், மஜ்தூப் பெரியார்கள் படிப்படியாக திக்ரு செய்விக்க முடியாதவர்களாய் இருப்பதால் சில சமயங்களில் அவர்களால் நஷ்டமும் ஏற்பட்டு விடுகிறது. மஜ்தூப்புகள் பிறரையும் தம்மைப் போல் ஆக்கி விடுகின்றனர்.
ஸாலிகீன் பீர்மார்கள் தன் உணர்வு உள்ளவர்கள், மெது மெதுவாக தமது நிலையை முரீதில் திருப்பி விடுகின்றர்கள், முரீதையும் தம்மைப் போன்று உணர்வுள்ள ஸாலிகீங்களாக ஆக்கிவிடுகின்றனர். உதாரணமாக தாய் தன் மார்பின் பாலை ஒவ்வொரு மிடறாக ஊட்டி, தன் குழந்தையை வாலிபனாக ஆக்கிவிடுகிறாள் இதனால் எந்த இடைஞ்சலும் ஏற்படுவதில்லை.
No comments:
Post a Comment