அஸ்ஸலாமு அலைக்கும்

Friday, 2 December 2011

இஹ்சானில்........


  நாயகம்(ஸல்) அவர்களின் நெஞ்சைப் பிளந்தது, ஹிரா குகையில் இருந்தது, மிஃராஜிற்கு சென்றது ஆகிய இம்மூன்று சம்பவங்களால் ஏற்பட்ட சிறப்பான அம்சம் என்னவென்றால் புனிதமான அந்நெஞ்சிலிருந்து கியாமத் நாள் வரை மனிதர்களுக்கு அருட்கொடையும், அந்த அருட்கொடையில் தஸர்ருபும் (செயலை நிகழ செய்தலும்) கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. அதுபோல் இதுவரை யாரலும் கிடைக்கவில்லை, அண்ணலாரின் புனித நெஞ்சிலிருந்து கண்ணிய மிகு ஸஹாபாக்களின் நெஞ்சில் நேரடியாக அருட்கொடை பிரவகித்தது ஆதலால் ஈமான் கொண்ட நிலையில் அண்ணலாரை சந்தித்து அவர்களைப் பார்த்தவுடன் அல்லாஹ்வை நெருங்கும் இரகசியம் ஒவ்வொரு ஸஹாபிக்கும் வெளியாகிவிட்டது. இஹ்சான் என்ற பக்குவம் கிடைத்துவிட்டது,
                          நீ அல்லாஹ்வைப் பார்ப்பது போன்று வணங்கு, ஸஹாபப் பெருமக்களுக்கு நாயகம் (ஸல்) அவர்களின் முதல் சந்திப்பிலேயே அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துவந்தது, என்றால் வாழ்நாள் முழுவதும் ஏற்பட்ட எத்தனையோ சந்திப்புகளினால் இஹ்சானில் எவ்வளவு முன்னேற்றத்தை அவர்கள் அடைந்து இருப்பார்கள்? அதை யாரால் மதிப்பிடமுடியும்? நமக்குத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால் "அல்லாஹ்வைப் பார்ப்பது" என்ற இந்த விசயத்தில் மிக உயர்ந்த பதவியானது இந்த உம்மத்துக்களிலேயே    ஹஜ்ரத் அபுபக்கர்(ரலி) அவர்களுக்கே நஸிபாயிற்று. "பார்ப்பது" என்ற இந்த விசயத்தில் அவர்களை விட உயரச் சென்றவர்கள் வேறு யாருமில்லை. எப்படி நாயகம் (ஸல்) அவர்களின் ஜீவிய காலத்தில் அவர்களிடத்தில் அபுபக்கர் சித்தீக் (ரலி) மற்றவர்களை விட மிக நெருக்கமாக இருத்தார்களோ அதைப்போல் அண்ணாலார் மறைவெய்திய பின்னும் நாயகத்தின் பரிசுத்த கப்ரில் அவர்களுக்கே எல்லாரையும் விட மிக சமீபமான இடம் கிடைத்தது.
  நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி  

No comments:

Post a Comment