அல்லாஹ்வின் வழி நடப்போர் (ஸாலிகீன்) எப்பொழுது கல்பின் திக்ரை நடத்தாட்டுகின்றாரோ அப்போது கல்பின் நாட்டம் உடல் உறுப்பின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்கின்றது, எந்த நாட்டம் மனதால் திக்ரு செய்ய வைக்கின்றதோ அது உடல் உறுப்புக்கள் அனைத்தையும் திக்ரு செய்ய வைத்து விடுகின்றது, உடலின் மயிர்க்கால்கள், முடிகள், நரம்புக்கள், இரத்தத்துளிகள், எலும்புதுணுக்குகள் ஆகிய எல்லாமே உடம்பிலிருந்து திக்ரு செய்ய ஆரபித்துவிடுகின்றன. பின்பு பூராவும் திக்ரில் ஈடுபாடு கொள்கிறது, பின்பு எப்போதுமே தடைப்படுவதில்லை.
உடல் பூராவிலிருந்தும் திக்ரு நடப்பதற்கு தரிக்காவின் பிர்மார்கள் :சுல்தானுல் அத்கார்" ராஜ திக்ரு என்று கூறுகிறார்கள், இவ்வாறு திக்ரு செய்கின்றவர்கள் மரணித்த பின்பும் அல்லாஹ்வின் திக்ரு நிலைத்து இருக்கின்றது, இந்த திக்ரு உடலில் இறந்தபின்னும் நிலைத்து இருப்பதால் (ஹயாத்து) உயிரோடு இருக்கும் போதுள்ள தன்மைகளும் நிலையாக இருக்கும், உடல் செழிப்பு, இரத்தம், முகத்திலும் கண்ணிலும் பிரகாசம் முதலியவை அப்படியே நிலைத்திருக்கும். இத்தகையோர் மரணித்து நூற்றுக்கணக்கான வருடங்கள் சென்றிருந்தும் அவர்களின் கப்ரை திறந்து பார்த்தால் இதை நிலைதான் காணக்கிடைக்கின்றன.
எந்த மாற்றமுமின்றி அப்படியே சலாமத்தாக இருக்கின்றார்கள், மரணித்த பின்னுள்ள வாழ்க்கை என்று கூறப்படுவது இதுவே. இந்த (ஹயாத்) ஜீவிப்பு மிக உறுதியாகவும் இருக்கின்றது.
No comments:
Post a Comment