அஸ்ஸலாமு அலைக்கும்

Friday, 2 December 2011

உம்மத்தின் மனங்களை தூய்மைப் படுத்துவதற்காக


உம்மத்தின் மனங்களை  தூய்மைப் படுத்துவதற்காக   நான்கு பெரியார்கள் கடுமையான முயற்சியை  மேற்கொண்டு  தவஜ்ஜுஹ்  செய்வதற்கும் அதை எற்றுக்கொள்வதற்கும் உரிய வழி முறைகளை உருவாக்கினார்கள். எந்த செயல் நிகழ்வு நாயகம் (ஸல்) அவர்களிடமிருத்து ஸஹாபாக்களை அடைந்ததோ அதே நிகழ்வு மக்களையும் சென்றடைய வேண்டும், என்பதே இதற்கு காரணமாகும்.
அந்த பரக்கத்தான நான்கு மேதைகள்தாம் காதிரிய்யா, சிஷ்திய்யா, நக்ஷ்பந்தியா, சுஹ்ரவர்தியா ஆகிய தரீகாக்களின் தலைவர்களும், ஸ்தாபகர்களுமாவார்கள். இந்த பெரியார்கள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நிகரற்ற அருட்கொடை நிகழ்வுகளைத் தங்களின் நெஞ்சுக்களில் பெற்று மக்களின் நெஞ்சங்களில் வினியோகித்தார்கள். எண்ணற்ற மக்களின் மனங்களைப் பரிசுத்தப்படுத்தினார்கள் முயற்சி செய்தவர்களெல்லாம் இந்த தலைவர்களின் முலமாகப் பயனடைத்தார்கள், யார் முயற்சி செய்யவில்லையோ அவர்கள் பலனற்றவர்களாய் ஆகிவிட்டார்கள்,
இந்த தலைவர்களின் அருட்கொடைகள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, மறுமை நாள்வரை இது தொடர்ந்து கொண்ட இருக்கும். எனினும் ஒரு நிபந்தனை; முயற்சியில்லாமல் மக்களுக்கு மனத்தூய்மை கிட்டாது, இதன் உண்மை நிலை பின்வருமாறு; நாயகம்(ஸல்) அவர்களுடைய நாட்டமும் (தவஜ்ஜுஹ்) கவனிப்பும் பீருடைய மனதிற்கும் ரூஹூக்கும் வருகின்றன, பின்பு பீர்மார்கள் அதை முரீதின் மனதிலும் ருஹிலும் சேர்ந்து வைக்கின்றார்கள், முடிவில் முரீதுடைய மனதையும் ரூஹையும் பரிசுத்தப்படுத்தி, மனதை அல்லாஹ்வின் ஜோதியை தரிசிக்கும் கண்ணாடியாக ஆக்கி அல்லாஹ்வைப் பார்க்கின்ற அகப்பார்வை (முஷாஹதா) உடையவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறார்கள்.
  நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி  

No comments:

Post a Comment