ஸுலூக் என்பது மனதால் திக்ரு செய்வதும் அது ஜாரியாவதுமாகும், இரண்டாவது எப்போதும் அல்லாஹ்வின் நினைவிலேயே இருப்பதுமாகும். அது தான் இஹ்சான் ஆகும். மன ஒர்மையின்றி தொழுகையில்லை, இந்த மன ஒர்மை என்பது தொடர்ச்சியாக செய்தல் மற்றும் இஹ்சானின் பக்கம் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது, அதாவது இவ்விதமான மன ஒர்மையை அடைந்து தொழுங்கள், அதுதான் பூரணமான தொழுகை இல்லையெனில் அது தொழுகையில் சேராது; அது குறைவுடயதுதான்; இந்த ஹதீஸினால் ஸுலூக், மன ஒர்மை, இஹ்சான் முதலியவைகளை அடைய வேண்டியது அவசியம். என்பது கடினமாகவும் கண்டிப்புடனும் வலியுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது, ஹதீஸில் தொழுகை தொழுகையாளியின் முகத்திலேயே வீசி எறியப்படும்; என்று கூறப்படும் தொழுகை, கவனக் குறைவாகவும், மன ஒர்மையின்றி தொழும் தொழுகையேயாகும்.
ஒர்மையுடன் கூடிய தொழுகையானது அல்லாஹ்வுடன் சேர்ந்திருப்பதாகும், ஒர்மை அற்ற தொழுகை, நன்மைகுரியதாகும். இந்த இரண்டு வகைத் தொழுகையயும் இஹ்சான் உள்ள தொழுகையில் சேர்த்துள்ளார்கள், அல்லாஹ்வுடன் இருக்கும் தொழுகை பரிபூரணமான தொழுகையாகும், அதை அடையுமாறு ஆவலுட்டப்படுகிறது, இப்படிப்பட்டவர்கள் கேள்வி கணக்கில்லாமல் சுவர்க்கத்தில் நுழைய வைக்கப்படுவார்கள், மன ஒருமையற்ற தொழுகை நன்மைக்குரியதுதான்...என்றாலும் இந்த நிலை அச்சத்திற்க்குரியதாக இருக்கின்றது.
அல்லாஹு தஆலாவை நீ பார்க்க முடியாவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என நினை,; இது நிரம்ப வெற்றிகரமான விஷயமே, அத்துடன் இது பாவத்தை விட்டு உன்னை விடுவிக்கின்ற வஸ்துவாகவும் இருக்கின்றன, தரீக்கா பீர்மார்களின் சகவாசத்தால் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற இந்த எண்ணம் கெட்டியாகி விடுகிறது, மிகுதியான நன்மைகளையும் நலவுகளையும் அது உருவாக்கி விடுகிறது.
No comments:
Post a Comment