ஐந்து நேர தொழுகை நம் மீது கடமையக்கப்பட்டுள்ளது, தொழுகையின் நேரம் வந்தவுடன் தொழுகையை நிறைவேற்றுகின்றோம், ஆனால் நமது தொழுகையின் நிலை என்ன? முமீனின் மிஃராஜ் தொழுகையில் உள்ளது, மிஃராஜ் என்பது நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் சென்று சுவர்க்கம், நரகம் கண்டு வந்தது மாத்திரம் அல்ல, இதில் முக்கிய விஷயம் அல்லாஹ்வை சந்தித்ததே! முமீன்களின் தொழுகையில் மிஃராஜ், இது சாதாரண மக்களின் தொழுகையில் சாத்தியமா? இரண்டு விஷயங்கள் 1- அல்லாஹ்வை பார்ப்பது போல், 2- அல்லாஹ் நம்மை பார்க்கின்றான். அல்லாஹ் நம்மை பார்க்கின்றான் என்ற வெறும் சிந்தனையல்ல, பார்க்கின்றான் என்ற உணர்வு வேண்டும், இந்த உணர்வு உண்டானால் உடலிலும், உள்ளத்திலும் அச்சமும், நடுக்கமும் ஏற்படவேண்டும், ஆனால் தற்போது உள்ள நிலைஇமாம் ஜமாத்துடன் தொழுது முடிந்தபின் இமாம் சாஹிப் முதல் ராக்கத்தில் எந்த வசனத்தை ஒதினார்கள், இரண்டாம் ராக்கத்தில் எந்த வசனத்தை ஒதினார்கள் என கேட்டால் மிகுதமானவர்களுக்கு தெரிவதில்லை, காரணம் மனம் ஒரிமையின்மை இமாம் ஒத ஆரம்மித்தவுடன் இவர்களின் மனமோ இவ்வுலகை, இவ்வுலக வாழ்கையின் நிகழ்ச்சிகளில் உல்லாச பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்து விடுகின்றது. இந்த நிலை எப்படியெனில், காலையில் ஏழுந்து பல்துலக்கவேண்டும், குளிக்கவேண்டும், உடைஅணியவேண்டும், உண்ணவேண்டும், பொருள்தேடவேண்டும், என்கின்ற கடைமைகள் போல் தொழும் நேரம் வந்தால் தொழ வேண்டும் என்றாகிவிட்டது, எங்களின் தாதா செய்கு நாயகம் ஃபைஜீ ஷா (ரஹ்) அவர்கள் கூறுவார்கள் "நெற்றி காய்த்து, பாய் தேய்ந்தது தான் மிச்சம்" என்பார்கள். சில வருடங்களுக்கு முன் அடியேன் துபாய் நாட்டில் பிரபல கம்பெனியில் போர்மேனாக பணியாற்றிய பொழுது என் பொறுப்பில் 15 தொழிலாளர்கள் வேலை செய்தனர், அவர்களிடம் அன்றயை வேலைகளை கூறிவிட்டு பிறபணிகளை பார்க்க சென்று விட்டு மீண்டும் அவர்களிடம் வரும்போது "ஏய் சாப் ஆரகஹே" என ஒருவன் குரல் கொடுக்க அவர்களின் மனதிலும், உடளிலும் ஒர் மாற்றம் ஏற்பட்டு பணியில் வேகமும், கவனமும் உண்டாகிவிடும், காரணம் நாம் சரியாக வேலை செய்யவில்லை எனில் போர்மேன் சாப் நமது சம்பளத்தில் கட் செய்யக்கூடும், சிறந்த வேலையாளாகயில்லை என ரிப்போர்ட் எழுதக்கூடும், பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கிவிடக்கூடும், என்ற அச்சமே! சதாரணமான மனிதனுக்கு மனிதனே அச்சம் காரணமாக உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் உண்டாகும் போது, "அல்லாஹு அக்பர்" அல்லாஹ் பார்க்கின்றான் என்ற விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது மிகவும் கைசேதம் மட்டுமல்ல மிக பரிதாபத்துக்குரிய விஷயம். இந் நிலையில் தொழும் தொழுகையின் நிலைஎன்ன? அல்லாஹ் என்ற பெயரைக் கேட்டாலே மூமீனின் உடல் நடுநடுங்கும், அல்லாஹ் பார்க்கின்றான் எனும் சிந்தனையினால் ஒரு பயனும் இல்லை, மாறாக உணர்வு ஏற்படுதல் அவசியமாகும்' இந்த உணர்வுடன் தொழும் தொழுகை அல்லாஹ் பார்க்கின்றான் எனும் விஷயத்தை பூரணமாக்கும். இன்ஷா அல்லாஹ் நமது தொழுகையினை பரிபூரணமானதாக ஆக்கி அருள்வானாக, ஆமீன்.
(ஷைகு ஹக்கீமி ஷாவின் ஃபைஜானைக் கொண்டு---ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)
No comments:
Post a Comment