ருஹின் திக்ரு
உடல் பூராவும் திக்ரு செய்வதே ரூஹு திக்ரு செய்வதாகும், ஏனெனில் உடல் பூராவிலும் ரூஹ் இருக்கின்றது. ரூஹ் இல்லாத இடம் உடலில் எதுவும் இல்லை, ஆதலால் உடல் பூராவும் திக்ரு செய்கிறது என்றே பொருள். ரூஹீன் சம்மந்தம் கல்பைப் பொருத்து இருக்கின்றது. மனம் திக்ரு செய்யக்கூடியதாக ஆகிவிட்டால், ரூஹும் திக்ரு செய்வதாக ஆகிவிடுகின்றது.
ஹஜ்ரத் சூஃபி ஸர்மத் அலைஹிர்ரஹ்மா அவர்களின் சம்பவம் ஒன்று பிரபலமானதாகும், அவர்கள் ஷஹீதாக்கப் பட்டபோது தலை உடலை விட்டும் துண்டித்து விழுந்து விட்டது, அப்போது அவர்கள் எழுந்து நின்று கலிமா விரலை கழுத்தின் இரத்தத்தில் தோய்த்து கலிமா "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" என எழுதினார்கள், அத்துடன் பூமியில் விழுந்த ஒவ்வொரு இரத்தத் துளியிலிருந்தும் அல்லாஹ், அல்லாஹ் என்ற சப்தம் வந்து கொண்டிருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம்.
No comments:
Post a Comment