அல்லாஹ் கொடுத்த பார்வையால் பார்க்கின்றோம், அவன் கொடுத்த கேள்வியால் கேட்கின்றோம், என்று விளங்குவதும் தவறு, ஏன்னெனில் அவன் கொடுத்ததைக் கொண்டு பார்த்தாலும், கேட்டாலும் ஒரு தன்மைக்கு (சிபத்) இரண்டு மவ்சுப் (தன்மைக்குறியவன்) என்பது அவசியமாகிவிடும்.இதுவும் ஷிர்க்காக (இணையாளியக்குவது) இருக்கிறது. அல்லாஹ் சொல்கின்றான், "நான் மட்டுமே கேட்கிறேன், பார்க்கிறேன்" நாம் சொல்கின்றோம், "நானும் கேட்கின்றேன், பார்க்கின்றேன், இது தன்மைகளில் (சிபத்தில்) ஷிர்க் வைப்பதாகிறது.
"அவனே தான் நாடியதை செய்யக்கூடியவன்" ஆனால் நாம் நாடுவதாகவும், நாம் செயல்படுவதாகவும் நினைப்பது ஷிர்க் (அப்ஆல்) செயல்களில் இணைவைப்பதாகும், செயல்பட சக்தி(குவ்வத்) வேண்டும், ஹகீகத்தில்(அசல்) அல்லாஹு தஆலா சாஹிபே குவ்வத் (சக்தியுடையவனாகவும்,) பாஇலேஹகீகி (அசலில் செயல்படுபவனாகவும்) இருக்கின்றான்.
நம்மை சக்தியற்றவர்களாக விளங்கும் போது நம்மை முற்றிலும் நிர்பந்த்திற்க்குள்ளவனாக (மஜ்பூர்) கருதினால் இது இஸ்லாமிய அகீதாபடி குப்ர் ஆகிவிடும். எப்படியெனில் அல்லாஹ்வை குவத்துக்குரியவனாக ஆக்கி நம்மை முற்றிலும் மஜ்பூராக நினைப்பது, தீமையான செயல்களை அல்லாஹ்வின்பால் சாட்ட வேண்டியதாகிவிடும், தீய செயல்களை செய்தவனாக அல்லாஹுத் தஆலாவை விளங்கினால் குப்ராகிவிடும். எனவே இது பற்றி சரியான விளக்கம் பெற காமிலான ஷெஃய்கின் முலம் தெளகீதை பெறுவது அவசியம்.
வானம் பூமி இவை அல்லாஹ்வின் அதிகாரத்திற்க்கு உட்பட்டது, இருப்பினும் நாமும் என் சொத்து என் வீடு என் பொருள் என் மக்கள் என இவ்வுலகில் உள்ள பலவற்றின் மீது உரிமை கொள்கின்றோம், ஒரு பொருளுக்கு இரண்டு உரிமையாளர் இருக்கமுடியாது, ஷிர்க்பித் தம்லிக் அதாவது ஆசார்(சொத்துக்களில்) இணைவைப்பதாகும்.
இவ்வகையான ஷிர்க்குகளை தடுப்பதற்காகவே நபிமார்களின் வருகை இருந்தது, இன்றேயே காலகட்டத்தில் இந்த உன்னத பணியினை காமிலான ஷெஃகுமார்கள் செய்துவருகின்றார்கள். எனவே காமிலான ஷெஃகின் சகவாசத்தை அடைவது அவசியமாகும்,
கண்ணியமிக்க ஷெய்ஃகு ஹக்கீமீ ஷா பைஃஜி அவர்களின் ஃபைஜானைக் கொண்டு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமீ.
No comments:
Post a Comment