அல்லாஹு தாஆலா நாட்டமுடையவர்களின் சமீபத்தில் வந்து விடுகின்றன், குர்ஆனில் கூறியது போன்று "நாம் அடியார்களின் பிடரி நரம்பை விடவும் சமீபத்தில் இருக்கின்றோம்" (50:16) மற்றொரு இடத்தில் கூறுகின்றான், "நான் உங்களுடைய (நஃப்ஸ்) இதயங்களில் இருக்கின்றேன் நீங்கள் பார்க்கக் கூடாதா?" (51:21) ஸாலிக் இந்த இரண்டு நிலைகளையும் அடைகின்றார்கள்,
அடியான் தனது நாட்டத்தை அல்லாஹ்வின் கலந்து அல்லாஹ்வை தன்னிலும் உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் பெற்றுக் கொள்கின்றன், சில சமயங்களில் அல்லாஹூ தஆலா அடியானின் நுட்பமான நாட்டத்தின் பக்கம் தவஜ்ஜுஹ் கவனிப்பும் செய்கிறான், அடியார்களுக்கு அல்லாஹ்வின் சன்னிதானம் நெருக்கம் கிடைக்கின்றது, அல்லாஹு தஆலா உடன் அடியான் பேசவும் செய்கின்றான், இரகசிய உறவாடலும் ஏற்படுகிறது, சந்திக்கும் அந்தஸ்தும் கிடைக்கின்றது, அந்த நேரத்தில் அடியான் அடையும் நுட்பநிலை அல்லாஹ்வின் நுட்ப நிலையோடு போய்ச்சேருகிறது,
ஸாலிகீன் இதே நிலையை சுட்டிக்காட்டி மவ்லான ரூமி(ரஹ்) கூறுகின்றார்கள், நான் நீயாக ஆகிவிட்டேன், நீ நானாக ஆகி விட்டாய், நான் உடலாக இருக்கின்றேன், நீ உயிராக இருக்கிறாய், இதற்க்கு பின் யாரும் நான் வேறு, நீ வேறு என்று சொல்லக்கூடாது. எனவே பெரும் வழிகேடான விஷயம் என்னவெனில் இந்த நிலையை, அல்லாஹ் அடியானாக ஆகிவிட்டான், அடியான் அடியானாக இல்லை; அல்லாஹ்வாக ஆகிவிட்டான், என்று நினப்பதுதான். இந்த நிலை என்னவென்றால் அடியானுக்கு அல்லாஹ்வின் நெருக்கம் சன்னிதானம் நஸீபானது என்பதுதான், மாறாக அடியான் அல்லாஹ்வாக ஆகிவிட்டான் என்பதல்ல,
இந்த நிலை எப்பொழுதும் இராது, இருக்கவேண்டியதும் இல்லை. இதற்கு பின் உள்ள நிலை என்னவெனில் அடியான் உணர்வு பெற்றால் நான் நான்தான்; அல்லாஹ் அல்லாஹ்தான்: என்ற நிலைக்கு வந்து விடுகின்றான். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவெனில் "ஃபனாஃபில்லாஹ்" அல்லாஹ்வில் அழிந்து போன மக்கள் "நான் அல்லாஹ்வாக ஆகிவிட்டேன்" என நினைப்பதில்லை, அவர்கள் இந்த நிலையை அல்லாஹ்வின் நெருக்கம் என நினக்கின்றார்கள்,
கல்வி அறிவற்ற ஜாஹில்கள் தான் இந்த நிலையை அடியான் அடியானாக இல்லை; அல்லாஹ்வாக ஆகிவிட்டான் என எண்ணுகிறார்கள், இது மிகக்கடுமையான வழிகேடு. இதை விட்டும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.
No comments:
Post a Comment