லுக்மான் (அலை) அவர்கள் தாவுது (அலை) அவர்களுக்கு சொன்ன ஐந்து உபதேசங்கள்;
1-ஏ,தாவூதே! நீ உலகில் எந்தளவு தங்குவாயோ, அந்த அளவுதான் உனக்கு உலகப் பாசமும் பற்றும் இருக்க வேண்டும்.
2-ஏ,தாவூதே! மறுமையில் (சொர்க்கத்தில்) எவ்வளவு காலம் தங்கவேண்டுமென ஆசைப்படுகிறாயோ அவ்வளவு அதிகமாக நற்கிரியை புரி.
3-ஏ,தாவூதே! உன்னால் நரக நெருப்பை எவ்வளவு தூரம் பொறுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் பாவம் செய்வதில் வீரம்கொள்.
4-ஏ,தாவூதே! உனது எஜமானாகிய அல்லாஹ்வினுடைய தேவை உனக்கு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நீ அல்லாஹ்விற்கு வழிபட்டு நடந்து கொள்.
5-ஏ, தாவூதே! உனது எஜமானாகிய அல்லாஹ்விற்கு நீ மாறு செய்ய நாடினால் அவன் உன்னைக் காணாத இடத்திற்கு சென்று விடு.
No comments:
Post a Comment