ஈமான்
ஈமானின் ருக்னுக்கள்-2
1-நாவைக் கொண்டு மொழிவது,
2-கல்பைக் கொண்டு மெய்பிப்பது(உண்மை படுத்துவது)
நாம் வாயால் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரசுலில்லாஹ் என்று கலிமாவை மொழிந்து விட்டோம், நமது ஈமான் முழுமை அடைந்து விட்டதா.. என்றல் இல்லை என்றுதான் கூற வேண்டும், வாயால் மொழிந்ததைக் கொண்டும் நம் இஸ்லாத்திற்குள் வந்து விட்டோம் என்பது உறுதி, ஆனால் ஈமான் முழுமை அடையவில்லை என்பதுதான் உண்மை நிலை, காரணம் கல்பைக் கொண்டு மெய்பிப்பது என்பதில் நமது நிலைப்பாடு மிக பலஹினமானதாக இருப்பதே; தேவைகளை பூர்த்தி செய்பவன் அல்லாஹ் என்ற நிலையை அறிந்த பின்பும் அவனைக் கொண்டு எங்கனம் நமது தேவைகள் பூர்த்தியாகிறது என்பதில் நமது சிந்தனையின் தரிப்பாடு நிலையில்லாமல் இருப்பதுவே! முதலில் நம்மில் நாம் அறிய முயலவேண்டும், காலையில் எழுந்து இரவில் உறங்கி எழுவது வரை அனைத்தும் நமது செயல்களும் அல்லாஹ்வை கொண்டே நடப்பெற்றது. என்று நமது ஒவ்வொரு செயலிலும் அல்லாஹ்வின் சிந்தனையுடனும், நமக்கு சொந்தமாக எந்த தன்மைகளும் (சிபாத்) இல்லை அல்லாஹ்வின் தன்மைகளை கொண்டே நமது அனைத்து செயல்களும் நடைபெற்றது, நடைப்பெறுகின்றது, என்பதில் நமது கல்பு உறுதி அடைகின்றதோ அப்பொழுதுத் தான் கல்பைக் கொண்டு உண்மைப்படுத்துதல் பரிபூரணம் அடைந்து நமது ஈமானும் பரிபூரணத்துவம் அடையும்.
ஷைகு ஹக்கீமி ஷாவின் ஃபைஜானைக் கொண்டு---ஹலில் ரஹ்மான் ஹக்கீமி.
அல்ஹம்து லில்லாஹ்.
ReplyDeleteGood reminder. May Allah bless you.
ReplyDeleteHawama
Singapore