"லாயிலாக இல்லல்லாஹு முஹம்மதுர்ரசுலில்லாஹி, வணக்கத்திற்க்குறியவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை,முகம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள்"
லா--இல்லை
இலாஹ்--வணக்கத்திற்க்கு பாத்திரமான
இல்லா--தவிர
அல்லாஹ்--அல்லாஹ்
"லா", என்ற வார்த்தைக்கு அரபு மொழியில் இல்லை என்று பொருள் ஆனால் திருக்கலிமாவில் அல்லாஹ் கூறும் "லா" இல்லை என்பதுடன் மட்டும் நிலைபெற்றுவிடவில்லை, முற்றிலும் இல்லை, இல்லவேயில்லை என முழுமையாக ஒன்றை நிரகரிக்கிறது. "லா" என்ற சொல் எதை நிராகரிக்கிறது, அல்லாஹ் அல்லாதவைகளை,
அல்லாஹ் அல்லாதவைகள் என்று ஒன்று உண்டா? ஒன்றுல்லா கோடானகோடி இவ்வுலகில் காணகிடைக்கின்றது, இவ்வுலகில் ஏன் நம்மிலும், நம்மைசுற்றியுமே காணமுடியும், "கண்ணியமிக்க ஷெய்ஃகு நாயகம் சொல்வார்கள், "லா" எனும் வாளை எடுத்துக்கொள், அதை கொண்டு அல்லாஹ் அல்லாதவைகளை வெட்டிவீசு அதன் பின் அந்த வாளை உறையில் போட உனக்கு நேரமே கிடைக்காது"
இதில் முக்கியமான செய்தி முதலில் இந்த வாளைக்கொண்டு நாம் நம்மையே வெட்டிக் கொள்ள வேண்டியதுதான், அல்லாஹ் அல்லாதவை என்றால் என்ன? நான் உழைத்தேன், நான் சம்பாதித்தேன், நான் வீடு கட்டினேன், நான் கார் வாங்கினேன். என் பிள்ளைகளை நானே வளர்ந்தேன், நான் பார்க்கின்றேன், நான் கேட்கின்றேன், நான் பேசினேன், நான் நடந்தேன், நான் ஒடினேன், நான் பருகினேன், நான் உண்டேன், நான் உறங்கினேன், நான் ஆடினேன், நான் பாடினேன், நான் அனைத்தும் அறிந்தவன், அவர் எனக்கு உதவிசெய்தார், அது எனக்கு கொடுத்தது, இது போல் அல்லாஹ்வின் சிந்தனை உணர்வில்லாமல் நான் நானகவும், அவர் அவராகவும், அது அதுவாகவும், எதுவல்லாம் உண்டோ அவை சர்வமும் அல்லாஹ் அல்லாதவைகளே! இவைகளை நான் நானாக எதுவும் செய்யவில்லை, அவர் அவராக செய்யவில்லை, அது அதுவாக கொடுக்கவில்லை, அல்லாஹு தஆலா மட்டுமே அனைத்தயும் செய்பவன், தருபவன், வளர்ப்பவன், என்ற உணர்வுடன் "லா" எனும் வாளை கொண்டு முற்றிலும் நிராகரிக்க வேண்டியது அவசியமாகும், இல்லையனில் அல்லாஹ்விற்கு (ஷிர்க்) இணை வைத்ததாகும்., காரணம் அல்லாஹ் அல்லாத விஷயங்கள் நம்மில் அனேகம் உண்டு, நான் யார், அவர் யார், அது என்ன? தனது படைப்பினங்களின் தேவைகளை அல்லாஹ் எங்கனம் பூர்த்தி செய்கின்றான், இவைகளை அறிவதன் முலமே அல்லாஹ்வை அறிய முடியும் அல்லாஹ் அல்லாதவைகளையும் அறியமுடியும், அல்லாஹ்வை அறிய வேண்டும் எனில் முதலில் ஒரு காமிலான ஷெய்ஃகுவை அடைய வேண்டும், ஷெய்ஃகை அறிய வேண்டும், அவர்களை கொண்டு நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும், நம்மை சுற்றியுள்ளவைகளையும், அறிவது அவசியமாகும்,