அஸ்ஸலாமு அலைக்கும்

Tuesday, 27 December 2011

கண்ணியமிக்க ஷெய்ஃகு நாயகம் சொல்வார்கள், "லா" எனும்....


"லாயிலாக இல்லல்லாஹு முஹம்மதுர்ரசுலில்லாஹி, வணக்கத்திற்க்குறியவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை,முகம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய  திருத்தூதராக இருக்கிறார்கள்"
லா--இல்லை
இலாஹ்--வணக்கத்திற்க்கு பாத்திரமான
இல்லா--தவிர
அல்லாஹ்--அல்லாஹ்
"லா", என்ற வார்த்தைக்கு அரபு மொழியில் இல்லை என்று பொருள் ஆனால் திருக்கலிமாவில் அல்லாஹ் கூறும் "லா" இல்லை என்பதுடன் மட்டும் நிலைபெற்றுவிடவில்லை, முற்றிலும் இல்லை, இல்லவேயில்லை என முழுமையாக ஒன்றை நிரகரிக்கிறது. "லா" என்ற சொல் எதை நிராகரிக்கிறது, அல்லாஹ் அல்லாதவைகளை,
அல்லாஹ் அல்லாதவைகள் என்று ஒன்று உண்டா? ஒன்றுல்லா கோடானகோடி இவ்வுலகில் காணகிடைக்கின்றது, இவ்வுலகில் ஏன் நம்மிலும், நம்மைசுற்றியுமே காணமுடியும், "கண்ணியமிக்க ஷெய்ஃகு நாயகம் சொல்வார்கள், "லா" எனும் வாளை எடுத்துக்கொள், அதை கொண்டு அல்லாஹ் அல்லாதவைகளை வெட்டிவீசு அதன் பின் அந்த வாளை உறையில் போட உனக்கு நேரமே கிடைக்காது"
இதில் முக்கியமான செய்தி முதலில் இந்த வாளைக்கொண்டு நாம் நம்மையே வெட்டிக் கொள்ள வேண்டியதுதான், அல்லாஹ் அல்லாதவை என்றால் என்ன? நான் உழைத்தேன், நான் சம்பாதித்தேன், நான் வீடு கட்டினேன், நான் கார் வாங்கினேன். என் பிள்ளைகளை நானே வளர்ந்தேன்,  நான் பார்க்கின்றேன், நான் கேட்கின்றேன், நான் பேசினேன், நான் நடந்தேன், நான் ஒடினேன், நான் பருகினேன், நான் உண்டேன், நான் உறங்கினேன், நான் ஆடினேன், நான் பாடினேன், நான் அனைத்தும் அறிந்தவன், அவர் எனக்கு உதவிசெய்தார், அது எனக்கு  கொடுத்தது, இது போல் அல்லாஹ்வின் சிந்தனை உணர்வில்லாமல் நான் நானகவும், அவர் அவராகவும், அது அதுவாகவும், எதுவல்லாம் உண்டோ அவை சர்வமும் அல்லாஹ் அல்லாதவைகளே! இவைகளை நான் நானாக எதுவும் செய்யவில்லை, அவர் அவராக செய்யவில்லை, அது அதுவாக கொடுக்கவில்லை, அல்லாஹு தஆலா மட்டுமே அனைத்தயும் செய்பவன், தருபவன், வளர்ப்பவன், என்ற உணர்வுடன் "லா" எனும் வாளை கொண்டு முற்றிலும் நிராகரிக்க வேண்டியது அவசியமாகும், இல்லையனில் அல்லாஹ்விற்கு (ஷிர்க்) இணை வைத்ததாகும்., காரணம் அல்லாஹ் அல்லாத விஷயங்கள் நம்மில் அனேகம் உண்டு, நான் யார், அவர் யார், அது என்ன? தனது படைப்பினங்களின் தேவைகளை அல்லாஹ் எங்கனம் பூர்த்தி செய்கின்றான், இவைகளை அறிவதன் முலமே அல்லாஹ்வை அறிய முடியும் அல்லாஹ் அல்லாதவைகளையும் அறியமுடியும், அல்லாஹ்வை அறிய வேண்டும் எனில் முதலில் ஒரு காமிலான ஷெய்ஃகுவை அடைய வேண்டும், ஷெய்ஃகை அறிய வேண்டும், அவர்களை கொண்டு நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும், நம்மை சுற்றியுள்ளவைகளையும், அறிவது அவசியமாகும்,
   

Friday, 23 December 2011

ஷிர்க்குகளை தடுப்பதற்காகவே நபிமார்களின் வருகை இருந்தது,


அல்லாஹ் கொடுத்த பார்வையால் பார்க்கின்றோம், அவன் கொடுத்த கேள்வியால் கேட்கின்றோம், என்று விளங்குவதும் தவறு, ஏன்னெனில் அவன் கொடுத்ததைக் கொண்டு பார்த்தாலும், கேட்டாலும் ஒரு தன்மைக்கு (சிபத்) இரண்டு மவ்சுப் (தன்மைக்குறியவன்) என்பது அவசியமாகிவிடும்.இதுவும் ஷிர்க்காக  (இணையாளியக்குவது) இருக்கிறது. அல்லாஹ் சொல்கின்றான், "நான் மட்டுமே கேட்கிறேன், பார்க்கிறேன்" நாம் சொல்கின்றோம், "நானும் கேட்கின்றேன், பார்க்கின்றேன், இது தன்மைகளில் (சிபத்தில்) ஷிர்க் வைப்பதாகிறது.
"அவனே தான் நாடியதை செய்யக்கூடியவன்" ஆனால் நாம் நாடுவதாகவும், நாம் செயல்படுவதாகவும் நினைப்பது ஷிர்க் (அப்ஆல்) செயல்களில் இணைவைப்பதாகும், செயல்பட சக்தி(குவ்வத்) வேண்டும், ஹகீகத்தில்(அசல்) அல்லாஹு தஆலா சாஹிபே குவ்வத் (சக்தியுடையவனாகவும்,) பாஇலேஹகீகி (அசலில் செயல்படுபவனாகவும்) இருக்கின்றான்.
நம்மை சக்தியற்றவர்களாக விளங்கும் போது நம்மை முற்றிலும் நிர்பந்த்திற்க்குள்ளவனாக (மஜ்பூர்) கருதினால் இது இஸ்லாமிய அகீதாபடி குப்ர் ஆகிவிடும். எப்படியெனில் அல்லாஹ்வை குவத்துக்குரியவனாக ஆக்கி நம்மை முற்றிலும் மஜ்பூராக நினைப்பது, தீமையான செயல்களை அல்லாஹ்வின்பால் சாட்ட வேண்டியதாகிவிடும், தீய செயல்களை செய்தவனாக அல்லாஹுத் தஆலாவை விளங்கினால் குப்ராகிவிடும். எனவே இது பற்றி சரியான விளக்கம் பெற காமிலான ஷெஃய்கின் முலம் தெளகீதை பெறுவது அவசியம்.
வானம் பூமி இவை அல்லாஹ்வின் அதிகாரத்திற்க்கு உட்பட்டது, இருப்பினும் நாமும் என் சொத்து என் வீடு என் பொருள் என் மக்கள் என இவ்வுலகில் உள்ள பலவற்றின் மீது உரிமை கொள்கின்றோம், ஒரு பொருளுக்கு இரண்டு உரிமையாளர் இருக்கமுடியாது, ஷிர்க்பித் தம்லிக் அதாவது ஆசார்(சொத்துக்களில்) இணைவைப்பதாகும்.
இவ்வகையான ஷிர்க்குகளை தடுப்பதற்காகவே நபிமார்களின் வருகை இருந்தது, இன்றேயே காலகட்டத்தில் இந்த உன்னத பணியினை காமிலான ஷெஃகுமார்கள் செய்துவருகின்றார்கள். எனவே காமிலான ஷெஃகின் சகவாசத்தை அடைவது அவசியமாகும்,                                                                                                                                                                                                                                         
கண்ணியமிக்க ஷெய்ஃகு ஹக்கீமீ ஷா பைஃஜி அவர்களின் ஃபைஜானைக் கொண்டு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமீ.

Thursday, 22 December 2011

தீனில் ஷிர்க்.....!


தீனில் ஷிர்க்--அல்லாஹ்வுடைய ஜாத்(உள்ளமை) சிபாத்(தன்மைகள்), அப்ஆல்(செயல்பாடுகள்), ஆசார்(உடமைகள்) இவைகளில் இணைவைப்பதை விட்டும் தப்பவேண்டும், ஜாத்(உள்ளமை) சிபாத்(தன்மைகள்), அப்ஆல்(செயல்பாடுகள்), ஆசார்(உடமைகள்) இவைகளை பற்றி விளங்கவில்லையெனில் ஷிர்கை விட்டு தப்புவதும் முடியாத காரியம். அல்லாஹ் ஹயாத்தாகவும், தரிபாடகவும் இருக்கின்றான், நாமும் ஹயாத்தாகவும், தரிப்படாக இருப்பதாக விளங்குகின்றோம், இந்த இடத்திலிருந்து ஷிர்க் ஆரம்பமாகிறது. இதுவே உண்மையான (ஹகீகி) ஷிர்க்காக ஆகும்.
உருவ வழிபாடு செய்வது ஷிர்க்குக்கு ஒப்பான செயல்(மஜாஸி ஷிர்க்) சுஃபியாக்களின் கூற்றுப்படி குப்ரே பாதில் ஆகும்ஜாத்திலும், சிபத்திலும் ஷிர்க் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே கேட்டல், பார்த்தல் போன்ற சிபாத்துக்கள் சொந்தமாக இருக்கும்போது, நாம் பார்ப்பதாக, கேட்பதாக நினைக்கின்றோம், இது அல்லாஹ்வின் சிபத்தில் இணைவைப்பதாகும்.
பொதுஜனங்கள் இதனை அல்லாஹ்வைப் போல(அனைத்தையும்) கேட்பவர்களாகவும், பார்ப்பவர்களாகவும் இல்லை, என விளக்கம் தருகின்றார்கள். இது அவர்களின் அறியாமை மிக அழகாக அவர்களை ஏமாற்றிவிட்டது. அல்லாஹ் தஆலாவை போல் நாம் பார்ப்பதில்லை, கேட்ப்பதில்லை என கூறுவது அவனுக்கு மிஸ்லியத்(முற்றிலும் ஒப்பாக இருப்பதை) மறுப்பதாகும், ஆனால் முஷாபஹத்(சிறிதளவேனும் ஒப்பாக இருப்பதை) நிராகரித்தாகது, அல்லாஹ் தஆலா மிஸ்லியத், முஷாபஹத் இரண்டையும் விட்டு பரிசுத்தமானவன் என்று நம்புவதே தவ்ஹீது ஆகும்.
கண்ணியமிக்க ஷெய்ஃகு ஹக்கீமீ ஷா பைஃஜி அவர்களின் ஃபைஜானைக் கொண்டு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமீ

Wednesday, 21 December 2011

தரீகத்திற்கு முரணாக உள்ளவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்,


தரீகத்திற்கு முரணாக உள்ளவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும், நபிமார்களின் வருகை ஷிர்க் இணைவைப்பதை விலக்கவும், ஷிர்க்குடைய அமல்களை நீக்கவும், தெளஹீதையும், தெளஹீது சம்பந்தப்பட்ட அமல்களை தரிப்படுத்துவதற்காகவுமேயாகும். நபிமார்கள் மக்களுக்கு ஷிர்க்குடைய செயல்களை விலக்கி தெளஹீதை போதித்தார்கள்.
இன்று நாம் மஃபூதியத் (வணக்கத்தில்) இணை வைப்பதையும், இஸ்தியானத்(உதவிதேடுவதிலும்) இணைவைப்பதை பகிரங்கமாக விளங்கியிருக்கின்றோம்.
மக்களின் பொதுவான எண்ணம் வணக்கத்தில் இணைவைத்தல் என்பது அவுலியக்களின் அடக்கஸ்த்தலங்களுக்கு செல்வது, ஷாத்த பஞ்ஜா எடுப்பதும், உதவி தேடுவதில் கியார்வின், ஜண்டா, கொடி போன்றவையும், அல்லாஹ் அல்லாதவற்றிக்காகநேர்ச்சை செய்வதும், எடுத்துக்காட்டாக கூறப்படுகின்றது, இவைகள் ஜாஹில் அறிவு ஞானமற்ற ஜனங்கள் உண்டாக்கியவை.
நாம் சிந்திக்கவேண்டும் நாயகம்(ஸல்) அவர்கள் சஹாப பெருமக்களை எப்பொழுது ஷிர்க்கை விட்டும் ஷிர்க்குடைய செயல்களை விட்டும் தடுத்தார்களோ, அப்பொழுது தர்காக்களோ, கொடிகளோ இருக்கவில்லை, அப்படியிருக்க சிலை வணக்கம், விக்ரக ஆராதனைகளை விட்டும் தெளபா செய்துவிட்ட சஹாபா பெருமக்களை  நபி(ஸல்) அவர்கள் எந்த ஷிர்க்கை விட்டும் தடுத்தார்கள்?
நபி(ஸல்) அவர்கள் காபிர்கள், முஷ்ரிகீன்களை மட்டுமே ஷிர்க்கை விட்டு தடுத்தார்கள் என்று யாரேனும் விபரமறியாமல் கூறினால் குர்ஆன் அவர்களுக்கு பதில் கூறுகிறது, "எவர்கள் ஈமான் கொண்ட பிறகு தங்களுடைய ஈமானில் அநீதத்தை கலக்கவில்லையோ அவர்களுக்கே (நிம்மதி) கார்மானம் இருக்கிறது. அவர்களே நேர்வழி பெற்றோர் ஆகும்."
இந்த ஆயத்தில் கூறப்பட்ட அநீதம் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கமளிக்கும் போது ("இன்னஷ்ஷிர்க லலுல்முன் அலீம்") நிச்சயமாக இணைவைப்பதாகிறது மிகப் பெரிய அநீதம் ஆகும், என்ற ஆயத்தை ஒதி விளக்கமளித்தார்கள், இவ்வாயத்தில் மிகப்பெரிய அநீதம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது ஈமான் கொண்டப்பின் ஏற்படும் ஷிர்க் என்ன என்பதுதான்!
இந்த இடத்தில் யோசிக்க வேண்டும், குர்ஆனில் அல்லாஹ் கூறும் நிம்மதி யாருக்கு? , சுபச்செய்தியும் யாருக்கு? ஈமான் கொண்ட நாம் செய்யும் ஷிர்கானவை என்ன? ஈமான் கொண்ட நமக்கு அல்லாஹ்விற்க்கு இணைவைக்காதீர்கள் என்ற எச்சரிக்கை ஏன்? சிந்திக்க வேண்டாமா? எது ஷிர்க், எதில் ஷிர்க், ஆராய்ந்து அறிய வேண்டாமா? இதற்கான விளக்கம் தாங்களுக்கு தர அல்லாஹ் நாடினால் நிச்சயமாக காமிலான ஷெஃய்கின் சவாசத்தை உங்களுக்கு ஏற்படுத்துவான். மேலும் நிச்சயமாக காமிலான ஷெஃய்கின் மூலமே இதற்கான விளக்கத்தையும் பெற முடியும்.
கண்ணியமிக்க ஷெய்ஃகு ஹக்கீமீ ஷா பைஃஜி அவர்களின் ஃபைஜானைக் கொண்டு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமீ

Sunday, 18 December 2011

காமிலான ஷெய்ஃகு வின் கரம்பிடிக்காத வரை சாத்தியமேயில்லை,


தொழுகையில் மனதில் பல ஊசலாட்டங்கள் ஏற்படுகின்றது, காலமெல்லாம் மனதை ஊசலாட்டத்திலேயே அலைய விட்டபின் இப்பொழுது மனசாந்தி வேண்டும் என்றால் அது காமிலான ஷெய்ஃகு வின் கரம்பிடிக்காத வரை சாத்தியமேயில்லை,
அல்லாஹ்வின் அறிவிப்பு,
                       (நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன்பால் செல், அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்திருக்கிறான். நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து என்னுடைய சுவனபதியிலும் நுழைந்து விடு!"(89:27-20)
இந்த ஆயத்தே, நப்ஸ் முத்மயின்னவிற்க்கு ஆதாரமாக ஷெய்ஃகுமார்கள் கொண்டுள்ளார்கள், எனவே மனசாந்தி வேண்டுமெனில் காமிலான ஷெய்ஃகின் கரம்பிடித்தே ஆகவேண்டியது மிக அவசியமாகிறது, இதன்முலமாக திருப்தியடைந்த நப்ஸையும், வெற்றியயும் நிச்சயமாக அடையமுடியும்,
நப்ஸ் லாவ்வாமாவில் இருந்து முத்மயின்னாவாக மாறுவதற்க்கு ஆயிரக்கணக்கான நிலைகளும் படித்தரங்களும் இருக்கின்றன, மெது மெதுவாக லவ்வாமாவிலிருந்து முத்மயின்னா உண்டாகிறது, இரண்டிற்க்கும் ஒர் ஆரம்பமும் ஒர் முடிவும் உண்டு,
இரண்டுமே மெதுமெதுவாக முன்னேற்றத்தை அடைந்து, பரிபூரணத்தை அடையும் போது முரீது முத்மயின்னாவை அடைகின்றார்கள், இந்த முன்னேற்றம், மற்றும் பரிபூரணத் தன்மைக்கு ஷெய்ஃகின் உதவி மிகமிக முக்கியமாகும்,
உதவியில்லாமல் நோக்கத்தை அடையமுடியாது, உலகம் இதுவரை வஸீலாவக் கொண்டே நோக்கத்தை அடைந்து வந்து கொண்டிருக்கின்றது, மேலும் இவ்வழியில் முயற்சி கட்டாயமாகும்.
கண்ணியமிக்க ஷெய்ஃகு ஹக்கீமீ ஷா பைஃஜி அவர்களின் ஃபைஜானைக் கொண்டு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமீ

Saturday, 17 December 2011

நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே பர்ளாக.......


அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான், "நபியே! மனிதர்களை நோக்கி நீர் கூறும்,
              "நீங்கள் மெய்யாகவே, அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருந்தால், நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; உங்களை அல்லாஹ் நேசிப்பான்" (3:31)
திக்ரு, ஃபிக்ரு, ஸுலூக், அல்லாஹ்வின் மீது அன்பு ஏற்பட்டால், அந்த அல்லாஹ்வின் அன்பிற்கு, நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே பர்ளாக இருக்கின்றது. அப்போதுதான் அந்த அன்பை அன்பென்று சொல்ல முடியும், ஷரீஅத்தை கடைப்பிடிக்காமல் காட்டும் அன்பு, அன்பாக இருக்க முடியாது, அல்லாஹு தஆலா தன்னுடைய பிரியத்தையும், அதை வெளிப்படுத்தும் முறைகளையும், நாயகம்(ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றுவதில்தான் வைத்திருக்கின்றான்.
அதிகமானவர்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் என்னவெனில், திக்ரில் முன்னிலை வகிக்கின்றார்கள், அல்லாஹ்வின் தவஜ்ஜுஹ்-சிந்தனையிலும் முன்னிலையில் இருக்கின்றார்கள், அதானல் தரீக்காவின் பீர்மார்கள் இவ்வழியில் அவர்களுக்கு இஜாஸத்தும், கிலாஃபத்தும் கொடுத்து விடுகின்றார்கள். எனினும், ஷரீஅத் விஷயத்தில் அவர்களைப் பார்த்தால் ஷரீஅத்திற்கு விரோதியைப் போல் தோற்றமளிக்கின்றார்கள், ஷரீஅத்திற்கு முக்கியமளிப்பதில்லை, ஆனால் ஷரீஅத்தில்தான் அல்லாஹு தஆலாவின் அன்பும், தரீக்கத்தும், மஃரிபத்தும், ஹகீகத்தும் இருக்கின்றன. ஷரீஅத்தை விடுத்து தரீகத், மஃரிபத், ஹகீகத் எதுவுமில்லை. (பாதின்) அந்தரங்கத்தின் எல்லா முயற்சிகளும் அல்லாஹ்வின்பால் தவஜ்ஜுஹ்-சிந்தனை செய்வதின் எல்லா முன்னேற்றங்களுமே மஃரிபத் கிடைக்கவேண்டும்.என்பதற்காகவே இருக்கின்றன, ஏனென்றால் மஃரிபத்-அல்லாஹ்வை அறிவதன் மூலம், தொழுகையும், ஷரீஅத் முறைப்படி மற்ற அமல்களும் வந்துவிடவேண்டும்.
தரீக்கத்தில் முயற்சி செய்வதெல்லாம் தரீக்கத்தின் படி தொழுகை வந்துவிடவேண்டும் என்பதற்கேயாகும், ஷரீஅத்தின்படி அமல் வந்துவிடவேண்டும் அதில் ஷரீஅத்படி அமல் செய்யவேண்டும் வெறும் மஃரீபத், தரீகத், ஹகீகத்தினாலேயே எல்லாம் ஆகிவிடும் என்றிருந்தால் நாயகம்(ஸல்) அவர்களுக்கு ஷரீஅத் கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது, அதற்கு பகரமாக சன்னியாசியான துறவறத்தன்மை கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும், இதுதான் அசல் வாழ்க்கை எனவும் சொல்லப்பட்டிருக்கும், நாயகம்(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள், இஸ்லாத்தில் துறவறம் இல்லை;    ஷரீஅத்தை பின்பற்றுவதே இஸ்லாமாக இருக்கின்றது, இதுவே அசல் தீனாகவும் இருக்கின்றது. ஈமானாகவும் இருக்கின்றது, இதில்தான் துன்யா மற்றும் ஆகிரத்தின் வெற்றி இருக்கின்றது. அல்லாஹு தஆலா தெளிவாக கூறியுள்ளான்; நீங்கள் என்னை நேசிப்பதாக தாவாச் செய்தால் அதற்கு அடையாளம் நாயகம்(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதேயாகும்.
(ஷைகு ஹக்கீமி ஷாவின் ஃபைஜானைக் கொண்டு---ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)

Thursday, 15 December 2011

முரீதுகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சொற்பொருள்கள்;


முரீதுகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சொற்பொருள்கள்;
ஜீஸ்மு--உடல்
கல்பு--மனம்
ருஹ்--உயிர்
சிர்ரு--இரகசியம்
தவஜ்ஜஹ்--ஆழ்ந்த கவனிப்பு
ஹக்--அல்லாஹ்(உண்மையானது)
கைரஹக்--அல்லாஹ் அல்லாதவை,உண்மையல்லாதவை.
கைர்--மற்றவை
கைர்--நல்லவை
நிஸ்பத்--இணைக்கும் ஒன்று, (சம்மந்தப்படுத்துதல்)
தரஜாத்--தகுதி
குர்பு--நெருக்கம்
ஹக்கீகத்--அந்தரங்கத்தில் ஆழ்ந்த நிலை
இஸ்திலாஹ்--சுபியாக்களின் வழக்க சொல்முறை
முஷாஹதா--பார்த்தால்,(ஷுஹுது)
முராக்கிபா--கவனிப்பது,
இஸ்மி--பெயர் சம்மந்தப்பட்டது
பிஃலி--செயல் சம்மந்தப்பட்டது
வஸ்பி--பண்பு சம்மந்தப்பட்டது
தாத்தி--தாத் சம்மந்தப்பட்டது
சிர்ரி/ சிர்ரு--ரகசியமானது(அல்லாஹ்வின் தாத் ரகசியமானது)
மஃபூதிய்யத்--வணக்கத்திற்க்கு தகுதி பெற்ற தன்மை
இஸ்திஆனத்--கேட்டல்
ருபூபிய்யத்--படைத்து போஷித்து வளர்க்கும் தன்மை
தர்பியத்--முறைப்படி பரிபாலனம் செய்தல்
வஸ்ஃபிய்யா--சிபத் சம்மந்தமான
ரஹ்மானிய்யத்--கருணை குணம் கொண்ட தன்மை
சிபாத்தே காமிலா--முழுமையான பண்புகள்
ஹீவிய்யத்--தாத்தின் கடைசி ரகசியத்தன்மை
கய்யூம்--நிலைத்து இருப்பவன்
அவ்வல்--முதலானவன்
ஆகிர்--இறுதியானவன்
லாஹீர்--வெளிரங்கமானவன்
பாதின்அந்தரங்கமானவன்,
ஹக்--உண்மையானது
பாதில்--பொய்யானது
ஹகீகி--உண்மையான(சரியான)
யார்தாகூத்தை--(ஷைத்தானை) நிராகரித்து அல்லாஹ்வை ஈமான் கொண்டார்களோ அவர்கள் அருகாத ஒரு கயிறை சரியாக பிடித்து கொண்டவராவர்
ஜலி--பகிரங்கமான
கபி--மறைவான
அக்பா--மிக மறைவான
கபியுல் அக்பா--மிகமிக மறைவான
ஷிரயி--ஷரிஅத் சம்மந்தமான
இஸ்திலாஹ்--வழக்க முறை
மக்பூல்--எற்றுக் கொள்ளப்பட்ட
தரஜாத்--நல்ல தகுதி, நல்ல படித்தரம்
மிஸ்லிய்யத்--சரிசமமாக, உதாரணமாக
முமாஸிலத்--ஒன்று போல் தோன்றுதல்
முஷாபிஹத்--கொஞ்சமேனும் ஒத்து இருத்தல்
விஸால்--நெருக்கம்,இணைப்பு
மனஅயே--தடுத்தல்
--மேலும்
கதராத்--விண் சந்தேகம்
வஸாவிசு--சந்தேகம்
வஹம்(தவஹ்ஹீம்)--நுணுக்கமான சந்தேகம்
இர்திதாத்--ரத்துஆதல், திரும்பி விடுதல்
குத்நுமாயி--தன் திறனை பிறர்க்கு காட்டி பெருமைபடுதல்
குத்பினி--தன் திறமையை தானே ரசித்து பெருமைப்படுதல்
பித்அத்--புதுமை புகுத்துதல்
இக்திரா--புதுமை புகுத்துதல்
ஷபாஅத்--சிபாரிசு செய்தல்
ஹஸனா--அழகிய, நல்ல
சய்யிஆ--கெட்ட, மோசமான
ரியாஜன்--நடைமுறையில், வழக்கத்தில்
லாஜீம்--அவசியமாதல்
தர்தீப்--அமையும் முறை
நஜாத்--ஈடேற்றம்
தஸ்லிம்--எற்றுக் கொள்வது
இல்மி--அறிவு சம்மந்தமாக
அமலி--செயல் சம்மந்தமாக
கமால்--சரியான நிலை, தகுதி
ஃபாஸிக்--குற்றவாளி
தஃஜீம்--உயர்த்துவது
ஈஸாலே சவாபு--நன்மையை, பயனை பிறருக்கு தந்து விடுவது
வஸீலா--பொருட்டம் தேடுவது
ஹபத அமல்-அமல்கள் அழிக்கப்படுதல்
ஹபத அப்மால்--அமல்கள் அழிக்கப்படுதல்
ஹதீஸே ஜாரியா--மறைமுகமான, சுற்றி வளைத்த முறை(ஹதீஸ் படி)
ஷைகே மஜாஜ்--தோராயமான ஷைகு
ரியா--பிறர் மெச்சுவதற்காக ஒன்றை செய்தல்
ஹர்ஃப்--எழுத்து, வார்த்தை
நஃபி-இல்லை(எனஆக்குதல்)
இஸ்மே வஃஸ்பி--காரணப் பெயர்
லஃப்ஜ்--துண்டு வார்த்தை
இஸ்தினா--தவிர்க்கும் தன்மை
முஸ்தஸ்னா--தவிர்க்கப்பட்டது
முஸ்தஸ்னா மின்ஹூ--எதைவிட்டும் தவிர்க்கப்பட்டதே அது
இஸ்பாத்--உண்டு என ஆக்குதல்
முஹ்தாஜ்--தேவை உடையது
மிஹ்தாஜ் இலைஹி--தேவையில்லாதது
இஸ்திலாஹன்--சுபியாக்களின் பொருள் விளக்கம்
ஃபனா--அழியும் தன்மை
பகா--அழியாதன்மை
ஆலம்--உலகம், மாசிவல்லாஹ்
அய்ன்--அதுபோல ஆக்குதல்
தகாஜா--செய்யதுண்டுதல்
தஃவத்--அழைப்பு
தஸ்லிம்--எற்பு
தஸ்தீக்--உண்மைப்படுத்து
தர்கீப்--ஆசைப்படுவது
தஹ்கீக்--அந்தரங்கம் தெளிவது
இத்ராக்--ஒன்றை ஆழ்மனதில் வைத்து யோசித்தல்
ஸய்யீஆ--கெட்ட
தவ்ஹீன்--ஏளனம்
முஅத்தல்--(பண்புக்கள்) அறவே இல்லாதது
காமில்--சம்பூரணமான
ஸிபத்--தன்மை(பண்பு)
ஸிபாத்--தன்மைகள்(பண்புகள்)
(எழுத்துப் பிழை அல்லது பொருள் பிழை இருப்பின் தயவுகூர்ந்து மன்னித்து பிழைகளை சுட்டிக் காட்டினால் அடியேன் திருத்திக் கொள்ள ஏதுவாகயிருக்கும்).
(ஷைகு ஹக்கீமி ஷாவின் ஃபைஜானைக் கொண்டு---ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)