ஸுலூக் என்றால் நடப்பது என்று பொருள், தஸ்வ்வுஃபின் கலை மரபில் இதன் பொருள் "மனம் மற்றும் (ருஹ்) ஆன்மாவுடைய நாட்டத்தின் சக்தியால் அல்லாஹ்வின் பால் நடத்தல் என்பதாகும். குறைந்த கல்வியறிவு உடைய மனிதர், அந்த குறைந்த கல்வியுடனே தொழகை, நோன்பு, ஹஜ், ஸகாத் முதலிய கடமைகளை நிறைவேற்றுகிறார் அவரைப் பற்றி "அவர் தொழுதார், நோன்பு வைத்தார், ஹஜ் செய்தார், ஸகாத் கொடுத்தார் என்று கூறப்படுகிறது, பெரிய ஆலிம் ஒருவர் இந்த இஸ்லாமியக் கடமைகளை அறிந்து கல்வி அறிவோடு அவற்றை நிறைவேற்றுகிறார் என்றால் ஆலிம் சாஹிபு தொழுதார், நோன்பு வைத்தார், என்று தான் சொல்லப்படுகிறது இந்த கடமைகளை செய்து முடித்ததில் இருவரின் கடமைகளும் நிறைவேறி விட்டதாகவே சொல்லப்படுகிறது, எனினும் இருவருக்குமே மானத்தூய்மை அவசியம் ஏனென்றால் கடமையை நிறைவேற்றும் போது அவர்கள் கூடவே நப்ஸும் இருக்கின்றது. இருவருக்குமே கடமை நிறைவேறிவிடும். ஏனினும் அவர்கள் மனதை தூய்மை படுத்த-
-வில்லையென்றால் கடமை நிறைவேறினனும் மனம் தூய்மையடையாது, மனம் பரிசுத்தமாகாத காரணத்தால் மனத்தோடு சேர்ந்து நன்மையும் கிட்டாமல் அவனது இருப்பிடம் நரகமாகவும் ஆகி விடக்கூடும். ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தொழகை கடமையாக இருப்பதைப் போல் அந்த தொழகையைப் பாதுகாப்பதற்காக மனத்தூய்மையும் அவசியமாகும், ஆதலால் அல்லாஹு தாஆலா "மன்" என்ற சொல் முலம் பொதுவாக யாராக இருத்தாலும் மனதூய்மை அவசியம் என ஏற்படு த்தியுள்ளான்.
பரிபூரணத் தூய்மையடைந்தவரகள் தாங்களும் நிம்மதியாக நீந்துகிறார்கள். அதுமட்டுமின்றி முழ்குகின்றவர்களைக் காப்பாற்றுகிற சக்தி பெற்றவர்களாகவும், இருக்கிறார்கள் உதாரணமாக இமாம் ராஜீ (ரஹ்) மன்திக் கலையில் இமாமாக இருந்தார்கள் அவர்களின் மரணத்தருவாயில் சைத்தான் அவர்களைக் கெடுக்க சென்றான், அல்லாஹ் ஒருவன் தான் என்பதற்கு ஆயிரம் ஆதாரங்களை அவர்கள் வைத்திருந்தார்கள். இப்லிஸ் அவர்களிடம் "அல்லாஹ் இரண்டு என்று சொல்" என்றான், அதற்கு அவர்கள் தமது ஆதாரத்தைக் கூறி ஒன்றுதான் என்றார்கள், அதை அவன் உடைத்தான் .இரண்டாவது ஆதாரத்தை கூறினார்கள், அதையும் அவன் உடைத்தான், இப்படியே ஆயிரத்தையும் உடைத்து விட்டான், இவர்களின் ஈமானே தடுமாறும் நிலைக்கு வந்துவிட்டது. இது இப்படி இருக்க அல்லாஹு தஆலா இவர்களின் செய்கு நஜ்முத்தீன் குப்ரா (ரஹ்) அவர்களுக்கு இவர்களின் நிலையை கஷ்ஃபின் மூலம் வெளிப்படுத்தினான் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருத்த அவர்கள், ஆதாரமில்லாமலேயே அல்லாஹ் ஒருவன் தான் என ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது? என ஒரு சப்தம் கொடுத்தார்கள். இந்த சப்தம் இமாம் ராஜி (ரஹ்) அவர்களின் காதுக்கு எட்டியது, அவர்கள் தமது செய்கின் சப்தத்தை விளங்கி உணர்வு பெற்று உடனே "லாஹவ்ல" ஒதினார்கள். ஷைத்தான் ஒடி விட்டான். ராஜி (ரஹ்) அவர்கள் கலிமாவை மொழிந்தவர்களாக வெற்றியுடன் உலகை விட்டுப் பிரிந்தார்கள்.
நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி
எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கக்கூடிய இன்றையக்கால ஷைத்தாங்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.
ReplyDeleteA.J.Faizi