அஸ்ஸலாமு அலைக்கும்

Tuesday, 22 November 2011

மனப்பூர்வமாக ஏற்று கொள்ளவேண்டும்,


செய்கு எதை சொன்னாலும் அதை மனப்பூர்வமாக ஏற்று கொள்ளவேண்டும், அதை செய்திடல் வேண்டும், ஏனெனில் விருப்பம், அன்பு ஆகியவற்றின் அசலே இதை தவிர வேறு எதிலும் இல்லை. செய்குடைய வெளிரங்கமான இன்னும் அந்தரங்கமான :தசர்ருபாத்: (ஆதிக்கங்)களில் செயல்களில் குறிக்கீடு செய்யாதே. இல்மிலே குறைவோ தவறோ நிகழலாம். ஆனால் விருப்பத்திலும் அன்பிலும் குறைவு வரலாகாது, ஏனெனில் அன்பிலும் விருப்பத்திலும் குறைவு ஏற்பட்டால் செய்குடைய உள்ளத்திலிருந்து முரிதுடைய உள்ளத்துக்கு வரக்கூடிய ஃபைஜான் (அருள்) குறைந்துவிடும். தீனுடைய காரியமானலும், துன்யாவுடய காரியமானலும் சிறிய விசயமானாலும் பெரிய விசயமானாலும் செய்குடைய விருப்பம் சுய இஸ்டம், அனுமதி இன்றி துவங்காதே. செய்குடைய அழகிய நற்குணம் சாந்தம், அடிக்கடி மன்னிக்கும் மனப்பாண்மை ஆகிய உயர்தன்மையின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் மன்னித்து விடுவார்கள் எண்றெண்ணி அவர்கள் விரும்பாததை லேசாகக் கருதி செய்துவிடாதே! ஞான வெளிப்பாடு விழிப்பில் வந்தாலும் உறக்கத்தில் வந்தாலும் சரி செய்குடைய ஞானத்திலிருந்து பெற்றதாக உணர்க!
செய்கு பேசினால் நன்கு கவனமாக கேட்க வேண்டும் அடுத்து என்ன பேசுகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் செய்குடைய வார்த்தையாகிறது அல்லாஹ் உடைய வார்த்தையின் :வஸீலாவாகும் அவனுடைய வார்த்தையின் துணை கொண்டே பேசுகிறாகள் என்பதை நன்கு உணர்க,
செய்குடைய அருள் மழை பொழியும் வார்த்தையின் நஸிபை இழக்கக்கூடாது என்று எண்ணி ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளத்தை ஹாலிராக்கி எதிர்பார்த்து இருக்கவேண்டும் அல்லாஹ்வினால் அங்கீகாரம் செய்யப்பட்ட திருநாவினால் நம்முடைய வாழ்வின் வழிகாட்டுதல் வெளியாகுவதாக பூரணமாக நம்பு! இன்னும் அதை ஏற்று செயல்படுத்தும் வண்ணம் மறைவான புறத்திலிருந்து நம்மை நோக்கி அறிவிப்பு வருவதாகவும் எண்ணவேண்டும். செய்குடைய திரு முன் சப்தமிட்டு பேசுவது மரியாதைக் குறைவான செயலாகும். செய்கிடம் அளவோடு உரையாடுங்கள் வள வளவென்று அதிகம் பேசுவதினால் அவர்களைப் பற்றியுள்ள மரியாதை உள்ளத்தை விட்டும் நீங்கி விடுகிறது அதன் மூலம் ஃபைஜான் துண்டித்து விடும் (ஞானம் தடைப்படும்) அவர்களின் சன்னிதானத்தில் அவர்கள் விருப்பினால் அன்றி சிரிக்கவும் கூடாது. செய்குடன் பேச விருப்பினால் தீனுடைய பேச்சாயினும் துன்யா உடைய பேச்சாயினும் செய்கு அவர்கள் கேட்ககூடிய சூழ்நிலையிலும் ஒய்விலும் இருக்கின்றார்களா? என்பதை கவனிக்க வேண்டும். உங்களுடைய ரகசியங்களை அல்லாஹ்வால் ஹிபத்தாக கொடுக்கப்பட்டவைகளை அற்புதங்களை செய்கிடம் மறைக்க கூடாது ஏனெனில் அவைகளை செய்கிடம் கொண்டுவருவதில் நன்மை உண்டாக வழியுண்டு.
செய்குடைய வாய்மொழியை பிறருக்கு அறிவிக்கும் பொழுது அவர்க்கு புரியும்படி தெளிவாகவும் விரிவாகவும் கூறவும் உங்களின் விளக்கக்குறைவினால் செய்கை பற்றி தப்பு கருத்து உருவாகாமல் பேணுக!   
நன்றி---சாதகனின் பண்புகள்.
  தொகுப்பு----- அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான்

No comments:

Post a Comment