அல்லாஹு தஆலா நாட்டத்திற்கான மைய இடமாக உடலில் மனதை வைத்திருக்கின்றான். மனமானது அந்த நாட்டத்தைக் கொண்டு வேலை செய்கிறது. உடல் ழுழூவதையும் வேலை வாங்குகிறது. உடலின் எல்லா உறுப்புக்களுக்கும் மனமே அதிகாரி எனலாம். நாட்டமேஅதன் சக்தியாகும், உடல் உறுப்புகள் எல்லாம் மனித மனதின் அதிகாரத்திற்கு அடிபணித்தே இருக்கின்றன. அல்லாஹு தஆலா மனிதனுடைய மனதையும் நாட்டத்தையுமே தான் பார்க்கின்றான். அதை பொருத்தே கேள்வி கணக்கும் நடைபெறும்.
ஹதீஸீல் கூறப்பட்டுள்ளது; நிச்சயமாக அமல்கள் எல்லாம் நாட்டத்தைப் பொருத்தவையே ஆகும். "இதிலிருத்து மனிதனிடம் உள்ள அசல் விசயம் மனமும் நாட்டமும் ஆகும், ' என்பது தெளிவாகிறது. மற்றோரு ஹதீஸ் இவ் விசயத்தை இன்னும் தெளிவாக விளக்குகின்றது, நாயகம் (ஸல்) கூறுகின்றார்கள்; அல்லாஹு தஆலா உங்களின் வடிவத்தையும் உங்கள் செயல்களையும் பார்பதில்லை, மாறாக உங்கள் மனதையும், நாட்டத்தையுமே, பார்க்கின்றான்.
மனதைப்பற்றி, "அல்கல்பு-அர்ஷீல்லாஹ்-கல்பானது அல்லாஹ்வின் அர்ஷீ என்றும், கல்பானது-பைத்துல்லா- அல்லாஹ்வின் வீடு என்றும் கூறப்படுகின்றது, படைப்பில் இது மனித உடலில் மிகச்சிறிய பொருளாக இருந்தாலும் மதிப்பிலும் திறமையிலும் சக்தியிலும் மற்றெல்லாவற்றையும் மிகைத்ததாக இருக்கிறது. ஹதீஸ் குத்ஸீயில், அல்லாஹீ தஆலா கூறுகின்றான், " எந்த வஸ்துவும் என்னைத் தன்னுள் அடக்கிகொள்ளா முடியாது, எனினும் நான் முஃமின்களின் மனதில் அடங்கி விடுகின்றேன்" மற்றோரு இடத்தில் கூறப்பட்டுள்ளது, "உடைத்துபோன உள்ளத்தில் என்னைத் தேடுங்கள்" என அல்லாஹு தஆலா கூறுகின்றான்,
மனதின் மெய்நிலை என்னவென்றால் அது அல்லாஹ்வின் உள்ளமை எனும் ஜோதியின் வெளிப்பாடுகளை சுமந்து கொள்கிறது. வானத்தினாலும், பூமியினாலும் சுமத்து கொள்ள முடியவில்லை, அமானித்மெனும் சுமையை படைப்பினம் ஏதுவும் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மனிதனின் மனம் (கல்பு) ஏற்றுக் கொண்டது.
நாயகம் (ஸல்) மனதைப்பற்றி இவ்வாறு கூறியுள்ளார்கள், "நிச்சயமாக உடலில் ஒரு இறைச்சித்துண்டு இருக்கிறது, அது சீர்பட்டால் உடல் ழுழூவதும் சீராக இருக்கும், அது கெட்டுவிட்டால் உடல் ழுழூவதும் கெட்டுவிடும்" கவனியுங்கள் அது தான் கல்பாகும்.
நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி
No comments:
Post a Comment