ஒரு முரீது தன் செய்குக்கு முன்னால் சுய தன்மையை இழந்தவனாக ஆக வேண்டும், உணவு கப்பலை எதிர்பார்த்து காத்திருக்கும் கடற்கரை அகதிகளைப்போல, செய்கு முன் காத்திருக்க வேண்டும். முரீது தன்னுடைய கல்புடைய நிலைமைகளை செய்கு அறிகின்றார்கள், என்றும் அதற்குந்தாற் போல அவர்கள் செய்வர்கள் என்று எண்ணியவனாக கல்பில் ருஜுஃ ஆகவேண்டும். ஜிப்ரயீல்(அலை) அவர்கள் வஹி உடைய நம்பகமான காவலரைப் போல செய்கு அவர்களும் முரீதுக்கு இல்ஹாம் (இறை உதிப்பு) உடைய நம்பிக்கைகுறிய காவலராக இருக்கும், ஜிப்ரயீல்(அலை) அவர்கள் வஹியில் எவ்வாறு மோசடி செய்ய மாட்டார்களோ அவ்வாறே செய்கு அவர்கள் இல்ஹாமில் (இறை உதிப்பில்) மோசடி செய்ய மாட்டார்கள் பெருமானார்(சல்) அவர்கள்எவ்வாறு மனோ இச்சைக்கொண்டு பேசமாட்டார்களோ,அவ்வாறு செய்கு அவர்களும் வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும், ரசுலை பின்பற்றியவர்கள் தான் மனோ இச்சையைக் கொண்டு பேச மாட்டார்கள் செய்குடைய அந்தஸ்தை விட கூடுதால் அந்தஸ்தை நாடதீர்கள். முரீது என்றால் செய்கை நாடக்கூடியவன் என்று தான் பொருள் (அல்லாஹ் அஃலம்) ஆகவே "இராதா" தேட்டமெனும் ஒழக்கத்தை ஒழங்காக நிறைவேற்ற வேண்டும்.
சுபித்துவம் என்பது முழக்க முழக்க அதபாக இருக்கும் ஒவ்வொரு நேரத்திர்க்கும் ஒரு அதப் உண்டு, ஒவ்வொரு இடத்திற்க்கும் ஒரு அதப் உண்டு, ஒவ்வொரு சுழ்நிலைக்கும் ஒரு அதப் உண்டு. யார் அதபை (ஹாசிலாக்குவதை) அவசியமாக்கி கொள்வானேயானால் மாகன்களின் மகோன்னத் நிலமைகளை அடைந்து விடுவான் அதபை இழந்தவன் அனைத்தயும் இழந்தவன் ஆவான், அவன் (குருபு) நெருக்கத்தை எண்ணுகின்றான், ஆனால் தூரத்தையே அடைகின்ரான். (கபுலை) எண்ணுகின்றான் ஆனால் (ரத்து) மறுப்பை அடைகின்றான்.
நன்றி---சாதகனின் பண்புகள்.
தொகுப்பு----- அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி
No comments:
Post a Comment