அஸ்ஸலாமு அலைக்கும்

Monday, 28 November 2011

ருஹும் அதன் நுட்பமும்


அல்லாஹு தஆலா"(ருஹ்)ஆத்மாவின் சம்பந்தத்தை (கல்பு) இதயத்தோடு இணைத்துள்ளான், இதயம் சக்தியுடையதாக இருந்தால் (ருஹ்) ஆத்மாவும் சக்தியுடையதாகி விடுகிறது. இதயம் (கல்பு) பலஹீனமாக இருந்தால் (ருஹ்) ஆத்மாவும் பலஹீனமாகி விடுகிறது, இதயத்தின் நல்ல தன்மைகளும், கெட்ட தன்மைகளும் ஆத்மாவிலும் (ருஹிலும்) ஏற்படுகின்றன, இதயம் தூய்மையாக இருந்தால் (ருஹும்) ஆத்மாவும் பரிசுத்தமாக இருக்கும். இதயம் கெட்டுவிட்டால் ருஹும் கெட்டுவிடும்.
அல்லாஹு தஆலா முதலில் ஆத்மாவைப் படைத்தான். அதை ஆத்ம உலகத்தில் வைத்தான், ஆத்மா எவ்வளவு நுட்பமானது என்பதை யாரும் மதிப்பிட முடியாது, இது மிக நுட்பமானதாகும். எனினும், இத்தகைய  எல்லையில்லா நுட்பமான பொருளுக்கு மண்ணாலான உடலில் தங்குமிடத்தை அல்லாஹ் கொடுத்துள்ளான். அதை அதில் அடைத்து வைத்துள்ளான், என்பதுதான் அல்லாஹ்வின் ஆச்சரியம் மிகுந்த மிக உயர்ந்த நுட்பமாகும் அதற்கு (இன்சான்) மனிதன் என்று பெயரிட்டுள்ளான். மனிதன் தனது தனது நுட்பமான (ருஹ்) ஆத்மா (கல்பு) இதயம், மற்றும் அதன் நாட்ட சக்தி ஆகியவற்றின் முலம் அல்லாஹ்வை அறியவும், அவனை அடையவும், இவ்வாறு செய்தான். இல்லை என்றால் மண்ணில் இவ்வளவு சக்தி இல்லை. அதிலுள்ள தடிப்பத்தின் காரணத்தால் அல்லாஹ்வைப் பார்க்கவோ,அடையவோ அதனால் முடியாது. மனிதன் பூமியில்தான் இருக்கின்றான், மண்ணாலான உடலையே பெற்றிருக்கிறான். ஆனால் அல்லாஹு தஆலா உடைய(தாத்) உள்ளமையோ மறைவிலும் மறைவாய், அப்பாலுக்கும் அப்பால், நினைவுக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டுத்தான் இருக்கிறான். ஏனினும் அல்லாஹு தாலா மண்ணால் உருவான மனிதனுக்கும் (ருஹ்)ஆத்மா (கல்பு)இதயம், அதன் சக்தி முதலியவற்றை கொடுத்திருப்பதால் அதன் மூலம் அவன் அல்லாஹ்வை அடைகின்றான். கலிஃபத்துல்லாஹ்- அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும் ஆகிவிடுகிறான். மனிதர்களை அல்லாஹு தஆலா மண்ணால் படைத்து இயலாமை, பணிவு, வழிப்படுதல், எனும் தன்மைகளை இயற்கையாகவே அமைத்தான், அத்துடன் அதில் நெருப்பு, தண்ணீர், காற்று முதலியவைகளையும் வைத்தான். அவற்றின் குணம் பெருமை, மாறுசெய்தால் முதலியனவாகும், மனிதனில் இரண்டு மாறுபட்ட கூறுகள் இருக்கிறன. ஆதலால் மனிதன் சோதனையில் போடப்பட்டுள்ளான். மண்தன்மை இருப்பதால் முழமையான முறையில் அவன் வழிபடவும் செய்வான், நெருப்பு, தண்ணீர் மற்றும் காற்றின் தன்மைகள் இருப்பதால் அவன் பெருமை கொண்டு மாறுபடவும் செய்வான். ஆதலால் மனிதன் சோதனைக்குரியவனாய் இருக்கின்றான். மனிதன் கல்பு, ருஹு போன்ற நுட்பமான சக்தி வாய்ந்த வஸ்துக்களின் மூலம் நாட்டத்தின் சக்தியை உபயோகித்து முயற்சி செய்தால் அவன் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்துவிடுகின்றான், அல்லாஹு தஆலாவின் பக்கத்தில் நெருங்கி உடனிருத்தல் எனும் பாக்கியத்தைப் பெற்றுவிடுகிறான், நெருக்கத்தின் உச்சநிலையை அடைந்து விடுகின்றான். இதுதான் மனிதன் பிறந்ததன் பயனாகும்.


அல்லாஹு தஆலா மனிதனின் உபயோகத்திற்கு இதயத்தையும்,(ருஹ்) ஆத்மாவையும் நுட்பமான சக்தி வாய்ந்த வஸ்துக்களாகக் கொடுத்துள்ளான். இவை இரண்டும் எல்லாப் படப்புக்களின் மீதும் உயர்வான அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகின்றன. எனினும் அந்த சக்தியை மனிதன் அல்லாஹ்வின் திக்ரில் உபயோகித்தால்தான் இந்த உயர்வை அடைவான், அதனை துன்யாவிற்காக மட்டும் உபயோகித்தால் அவன் மிருகங்களை விடக் கெட்டவானக ஆகிவிடுவான்; அல்லாஹ் காப்பாற்றுவானாக.ஆமீன்

நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி  

Sunday, 27 November 2011

மனமும் நாட்டமும்



         அல்லாஹு தஆலா நாட்டத்திற்கான மைய இடமாக உடலில் மனதை வைத்திருக்கின்றான். மனமானது அந்த நாட்டத்தைக் கொண்டு வேலை செய்கிறது. உடல் ழுழூவதையும் வேலை வாங்குகிறது. உடலின் எல்லா உறுப்புக்களுக்கும் மனமே அதிகாரி எனலாம். நாட்டமேஅதன் சக்தியாகும், உடல் உறுப்புகள் எல்லாம் மனித மனதின் அதிகாரத்திற்கு அடிபணித்தே இருக்கின்றன. அல்லாஹு தஆலா மனிதனுடைய மனதையும் நாட்டத்தையுமே தான் பார்க்கின்றான். அதை பொருத்தே கேள்வி கணக்கும் நடைபெறும்.
         ஹதீஸீல் கூறப்பட்டுள்ளது; நிச்சயமாக அமல்கள் எல்லாம் நாட்டத்தைப் பொருத்தவையே ஆகும். "இதிலிருத்து மனிதனிடம் உள்ள அசல் விசயம் மனமும் நாட்டமும் ஆகும், ' என்பது தெளிவாகிறது. மற்றோரு ஹதீஸ் இவ் விசயத்தை இன்னும் தெளிவாக விளக்குகின்றது, நாயகம் (ஸல்) கூறுகின்றார்கள்; அல்லாஹு தஆலா உங்களின்  வடிவத்தையும் உங்கள் செயல்களையும் பார்பதில்லை, மாறாக உங்கள் மனதையும், நாட்டத்தையுமே, பார்க்கின்றான்.
         மனதைப்பற்றி, "அல்கல்பு-அர்ஷீல்லாஹ்-கல்பானது அல்லாஹ்வின் அர்ஷீ என்றும், கல்பானது-பைத்துல்லா- அல்லாஹ்வின் வீடு என்றும் கூறப்படுகின்றது, படைப்பில் இது மனித உடலில் மிகச்சிறிய பொருளாக இருந்தாலும் மதிப்பிலும் திறமையிலும் சக்தியிலும் மற்றெல்லாவற்றையும் மிகைத்ததாக இருக்கிறது. ஹதீஸ் குத்ஸீயில், அல்லாஹீ தஆலா கூறுகின்றான், " எந்த வஸ்துவும் என்னைத் தன்னுள் அடக்கிகொள்ளா முடியாது, எனினும் நான் முஃமின்களின்  மனதில் அடங்கி விடுகின்றேன்" மற்றோரு இடத்தில் கூறப்பட்டுள்ளது, "உடைத்துபோன உள்ளத்தில் என்னைத் தேடுங்கள்" என அல்லாஹு தஆலா கூறுகின்றான்,
          மனதின் மெய்நிலை என்னவென்றால் அது அல்லாஹ்வின் உள்ளமை எனும் ஜோதியின் வெளிப்பாடுகளை சுமந்து கொள்கிறது. வானத்தினாலும், பூமியினாலும் சுமத்து கொள்ள முடியவில்லை, அமானித்மெனும் சுமையை படைப்பினம் ஏதுவும் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மனிதனின் மனம் (கல்பு)  ஏற்றுக் கொண்டது.
          நாயகம் (ஸல்) மனதைப்பற்றி இவ்வாறு கூறியுள்ளார்கள், "நிச்சயமாக உடலில் ஒரு இறைச்சித்துண்டு இருக்கிறது, அது சீர்பட்டால் உடல் ழுழூவதும் சீராக இருக்கும், அது கெட்டுவிட்டால் உடல் ழுழூவதும் கெட்டுவிடும்" கவனியுங்கள் அது தான் கல்பாகும்.

நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி 

Saturday, 26 November 2011

மனிதனின் அந்தஸ்து......


மனிதனின் அந்தஸ்து
   அல்லாஹு தஆலா மனிதனைப் பற்றி "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக அமைக்கப்போகிறன்" என்று அறிவித்துள்ளான்.(2;30) அல்லாஹ்வின் இப்பிரதிநிதித்துவ அந்தஸ்து வேறு எந்தப் படைப்புக்கும் கிட்டவில்லை; மலக்குகளுக்கோ, ஜீன் வர்க்கத்திற்கோ, வானம் பூமிக்கோ, கிட்டவில்லை, அவனது படைப்புகளில் மனித இனத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது.  இதனால் தெரிவது என்ன?
   அல்லாஹு தஆலா மனிதனுக்கு இவ்விதமான பக்குவத்தையும், சக்தியையும் வழங்கியிருக்கிறான். அதன் காரணமாக எல்லாப் படைப்புக்களின் மத்தியிலும் மனிதனே அல்லாஹு தஆலாவின் பிரதிநித்துவப் பணியை நிறைவேற்றி வருகின்றான். அதாவது மனிதர்களே மற்றெல்லாப் படைப்புகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள், அவர்களின் சக்தி எல்லாரையும் விட மிகைத்து இருக்கிறது. சொல்லப் போனால் எல்லாப்படைப்புக்களும் மனிதர்களின் பணியாளார்களாகவே இருக்கின்றன.
   வெளித் தோற்றத்தில் காற்று, தண்ணீர், நெருப்பு, மண் ஆகியவைகளில் மனிதனின்  செயல் மூலம் பல விளைவுகள் ஏற்படுகின்றன,எனினும் இதையும் விட உயர்வாக உள்ளமனித அந்தரங்கத்தைக் கவனிப்பது தான் அவசியமாகும், அதன் மூலம் தான் அசல் பிரதிநிதித்துவமான கிலாபத்தே பாத்தினி (அந்தரங்க பிரதிநிதித்துவத்தை) விளங்க முடியும். எனவே தான் "உங்களில் அல்லாஹ்வின் நற்குணங்களை உருவாக்கி கொள்ளுங்கள்" என்று அறிவிக்கப்படுகிறது. எனவே இதிலிருந்து அல்லாஹு தஆலா, தன்னுடைய நற்குணங்களை ஏற்றுக் கொள்ளும் பண்பை மனிதனில் அமைத்து வைத்துள்ளான், என்பதும் மனிதன் முயன்றால் தன்னுள் அல்லாஹ்வின் நற்குணங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது தெரிய வருகின்றன.
  மன்னிக்கும் மனப்பாங்கு,விட்டுக்கொடுக்கும் தன்மை, இரக்கம், கருணை, தானதர்மம், நாட்டம், கல்வி, சக்தி போன்ற பண்புகளால் அல்லாஹு தஆலா மனிதனை அமைத்துள்ளான், நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா மனிதர்களுக்கும் தலைவராய் இருப்பதால் எல்லோரையும் விட அதிகமான நற்குணங்கள் அமையப்பெற்றவர்களாக அன்னார் இருந்தார்கள். நாயகம் (ஸல்) அவர்களை பற்றி, "நிச்சயமாக, மகத்தான நற்குணங்களுடையவராகவே நீர் இருக்கின்றீர்" என்று அல்லாஹ் கூறுகின்றான். 
  அண்ணல் (ஸல்) அவர்கள் பலகீனர்களுக்கு உதவிபுரிபவர்களாக இருந்தார்கள், தாம் பசியோடு இருந்த நிலையில், பசியுடன் வந்த மற்றவர்களுக்கு உணவளித்தார்கள், தமக்கு துன்பம் இழைத்தவர்களை மன்னித்தார்கள்  ஏழைகளை அரவணைத்தார்கள் சுருங்கக் கூறீன் மக்களின் மீது நீதியான முறையில் ஆட்சியும் செய்தார்கள். அத்துடன் சுரியன்,சந்திரன், வானம் பூமி, ஆகியவை மீது அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டினார்கள், நபி (ஸல்) அவர்களின் (முஃஜிஸா) அற்புதம் வெளியாகாத வஸ்துக்களே இல்லை எனலாம், இறுதியில் வானத்தின் எல்லையைத் தாண்டி அர்ஷையும் சென்றடைந்தார்கள், இத்தகைய பண்புக்களாலும் திறமைகளாலும்-- அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டதற்கேற்ப- எந்த சந்தேகமும் இல்லாமல் அல்லாஹ்வின் பிரதிநிதி மனிதன் தான் என்பது ஊர்ஜிதமாகிறது.
   அல்லாஹ்வை நம்பி உண்மையாக ஈமான் கொண்ட மனிதன் உண்மையிலேயே அல்லாஹ்வுடைய பிரதிநிதியும் சுவர்க்கத்திற்கு அருகதையுடையவனும் ஆவான், அல்லாஹ்வை நிராகரிக்கும் மனிதன் நரகவாசியாகி விடுகின்றான்.

நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி  

Friday, 25 November 2011

ஸுலூக் என்றால்.........


ஸுலூக் என்றால் நடப்பது என்று பொருள், தஸ்வ்வுஃபின் கலை மரபில் இதன் பொருள் "மனம் மற்றும் (ருஹ்) ஆன்மாவுடைய நாட்டத்தின் சக்தியால் அல்லாஹ்வின் பால் நடத்தல் என்பதாகும்.  குறைந்த கல்வியறிவு உடைய மனிதர், அந்த குறைந்த கல்வியுடனே தொழகை, நோன்பு, ஹஜ், ஸகாத் முதலிய கடமைகளை நிறைவேற்றுகிறார் அவரைப் பற்றி "அவர் தொழுதார், நோன்பு வைத்தார், ஹஜ் செய்தார், ஸகாத் கொடுத்தார் என்று கூறப்படுகிறது, பெரிய ஆலிம் ஒருவர் இந்த இஸ்லாமியக் கடமைகளை அறிந்து கல்வி அறிவோடு அவற்றை நிறைவேற்றுகிறார்  என்றால் ஆலிம் சாஹிபு தொழுதார், நோன்பு வைத்தார், என்று தான் சொல்லப்படுகிறது இந்த கடமைகளை செய்து முடித்ததில் இருவரின் கடமைகளும் நிறைவேறி விட்டதாகவே சொல்லப்படுகிறது, எனினும் இருவருக்குமே மானத்தூய்மை அவசியம் ஏனென்றால் கடமையை நிறைவேற்றும் போது அவர்கள் கூடவே நப்ஸும் இருக்கின்றது. இருவருக்குமே கடமை நிறைவேறிவிடும். ஏனினும் அவர்கள் மனதை தூய்மை படுத்த-
-வில்லையென்றால் கடமை நிறைவேறினனும் மனம் தூய்மையடையாது, மனம் பரிசுத்தமாகாத காரணத்தால் மனத்தோடு சேர்ந்து நன்மையும் கிட்டாமல் அவனது இருப்பிடம் நரகமாகவும் ஆகி விடக்கூடும். ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தொழகை கடமையாக இருப்பதைப் போல் அந்த தொழகையைப் பாதுகாப்பதற்காக மனத்தூய்மையும் அவசியமாகும், ஆதலால் அல்லாஹு தாஆலா "மன்" என்ற சொல் முலம் பொதுவாக யாராக இருத்தாலும் மனதூய்மை அவசியம் என ஏற்படு த்தியுள்ளான்.
பரிபூரணத் தூய்மையடைந்தவரகள் தாங்களும் நிம்மதியாக நீந்துகிறார்கள். அதுமட்டுமின்றி முழ்குகின்றவர்களைக் காப்பாற்றுகிற சக்தி பெற்றவர்களாகவும், இருக்கிறார்கள் உதாரணமாக இமாம் ராஜீ (ரஹ்) மன்திக் கலையில் இமாமாக இருந்தார்கள் அவர்களின் மரணத்தருவாயில் சைத்தான் அவர்களைக் கெடுக்க சென்றான், அல்லாஹ் ஒருவன் தான் என்பதற்கு ஆயிரம் ஆதாரங்களை அவர்கள் வைத்திருந்தார்கள். இப்லிஸ் அவர்களிடம் "அல்லாஹ் இரண்டு என்று சொல்" என்றான், அதற்கு அவர்கள் தமது ஆதாரத்தைக் கூறி ஒன்றுதான் என்றார்கள், அதை அவன் உடைத்தான் .இரண்டாவது ஆதாரத்தை கூறினார்கள், அதையும் அவன் உடைத்தான், இப்படியே ஆயிரத்தையும் உடைத்து விட்டான், இவர்களின் ஈமானே தடுமாறும் நிலைக்கு வந்துவிட்டது. இது இப்படி இருக்க அல்லாஹு தஆலா இவர்களின் செய்கு நஜ்முத்தீன் குப்ரா (ரஹ்) அவர்களுக்கு இவர்களின் நிலையை கஷ்ஃபின் மூலம் வெளிப்படுத்தினான் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருத்த அவர்கள், ஆதாரமில்லாமலேயே அல்லாஹ் ஒருவன் தான் என ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது? என ஒரு சப்தம் கொடுத்தார்கள். இந்த சப்தம் இமாம் ராஜி (ரஹ்) அவர்களின் காதுக்கு எட்டியது, அவர்கள் தமது செய்கின் சப்தத்தை விளங்கி உணர்வு பெற்று உடனே "லாஹவ்ல" ஒதினார்கள். ஷைத்தான் ஒடி விட்டான். ராஜி (ரஹ்) அவர்கள் கலிமாவை மொழிந்தவர்களாக வெற்றியுடன் உலகை விட்டுப் பிரிந்தார்கள்.


நன்றி--நூல்-மதனீய்யின் மாண்புகள்
தொகுப்பு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமி  

Thursday, 24 November 2011

செய்குக்கு முன்னால்


ஒரு முரீது தன் செய்குக்கு முன்னால் சுய தன்மையை இழந்தவனாக ஆக வேண்டும், உணவு கப்பலை எதிர்பார்த்து காத்திருக்கும் கடற்கரை அகதிகளைப்போல, செய்கு முன் காத்திருக்க வேண்டும். முரீது தன்னுடைய கல்புடைய நிலைமைகளை செய்கு அறிகின்றார்கள், என்றும் அதற்குந்தாற் போல அவர்கள் செய்வர்கள் என்று எண்ணியவனாக கல்பில் ருஜுஃ ஆகவேண்டும். ஜிப்ரயீல்(அலை) அவர்கள் வஹி உடைய நம்பகமான காவலரைப் போல செய்கு அவர்களும் முரீதுக்கு இல்ஹாம் (இறை உதிப்பு) உடைய நம்பிக்கைகுறிய காவலராக இருக்கும், ஜிப்ரயீல்(அலை) அவர்கள் வஹியில் எவ்வாறு மோசடி செய்ய மாட்டார்களோ அவ்வாறே செய்கு   அவர்கள் இல்ஹாமில் (இறை உதிப்பில்) மோசடி செய்ய மாட்டார்கள் பெருமானார்(சல்) அவர்கள்எவ்வாறு மனோ இச்சைக்கொண்டு பேசமாட்டார்களோ,அவ்வாறு செய்கு அவர்களும் வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும், ரசுலை பின்பற்றியவர்கள் தான்  மனோ இச்சையைக் கொண்டு பேச மாட்டார்கள்  செய்குடைய அந்தஸ்தை விட கூடுதால் அந்தஸ்தை நாடதீர்கள். முரீது என்றால் செய்கை நாடக்கூடியவன் என்று தான் பொருள் (அல்லாஹ் அஃலம்) ஆகவே "இராதா" தேட்டமெனும் ஒழக்கத்தை ஒழங்காக நிறைவேற்ற வேண்டும்.
            சுபித்துவம் என்பது முழக்க முழக்க அதபாக இருக்கும் ஒவ்வொரு நேரத்திர்க்கும் ஒரு அதப் உண்டு, ஒவ்வொரு இடத்திற்க்கும்  ஒரு அதப் உண்டு, ஒவ்வொரு சுழ்நிலைக்கும் ஒரு அதப் உண்டு. யார் அதபை (ஹாசிலாக்குவதை) அவசியமாக்கி கொள்வானேயானால் மாகன்களின் மகோன்னத் நிலமைகளை அடைந்து விடுவான் அதபை இழந்தவன் அனைத்தயும் இழந்தவன் ஆவான், அவன் (குருபு) நெருக்கத்தை எண்ணுகின்றான், ஆனால் தூரத்தையே அடைகின்ரான். (கபுலை) எண்ணுகின்றான் ஆனால் (ரத்து) மறுப்பை அடைகின்றான்.


  நன்றி---சாதகனின் பண்புகள்.
  தொகுப்பு----- அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி



                                                                  


Tuesday, 22 November 2011

மனப்பூர்வமாக ஏற்று கொள்ளவேண்டும்,


செய்கு எதை சொன்னாலும் அதை மனப்பூர்வமாக ஏற்று கொள்ளவேண்டும், அதை செய்திடல் வேண்டும், ஏனெனில் விருப்பம், அன்பு ஆகியவற்றின் அசலே இதை தவிர வேறு எதிலும் இல்லை. செய்குடைய வெளிரங்கமான இன்னும் அந்தரங்கமான :தசர்ருபாத்: (ஆதிக்கங்)களில் செயல்களில் குறிக்கீடு செய்யாதே. இல்மிலே குறைவோ தவறோ நிகழலாம். ஆனால் விருப்பத்திலும் அன்பிலும் குறைவு வரலாகாது, ஏனெனில் அன்பிலும் விருப்பத்திலும் குறைவு ஏற்பட்டால் செய்குடைய உள்ளத்திலிருந்து முரிதுடைய உள்ளத்துக்கு வரக்கூடிய ஃபைஜான் (அருள்) குறைந்துவிடும். தீனுடைய காரியமானலும், துன்யாவுடய காரியமானலும் சிறிய விசயமானாலும் பெரிய விசயமானாலும் செய்குடைய விருப்பம் சுய இஸ்டம், அனுமதி இன்றி துவங்காதே. செய்குடைய அழகிய நற்குணம் சாந்தம், அடிக்கடி மன்னிக்கும் மனப்பாண்மை ஆகிய உயர்தன்மையின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் மன்னித்து விடுவார்கள் எண்றெண்ணி அவர்கள் விரும்பாததை லேசாகக் கருதி செய்துவிடாதே! ஞான வெளிப்பாடு விழிப்பில் வந்தாலும் உறக்கத்தில் வந்தாலும் சரி செய்குடைய ஞானத்திலிருந்து பெற்றதாக உணர்க!
செய்கு பேசினால் நன்கு கவனமாக கேட்க வேண்டும் அடுத்து என்ன பேசுகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் செய்குடைய வார்த்தையாகிறது அல்லாஹ் உடைய வார்த்தையின் :வஸீலாவாகும் அவனுடைய வார்த்தையின் துணை கொண்டே பேசுகிறாகள் என்பதை நன்கு உணர்க,
செய்குடைய அருள் மழை பொழியும் வார்த்தையின் நஸிபை இழக்கக்கூடாது என்று எண்ணி ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளத்தை ஹாலிராக்கி எதிர்பார்த்து இருக்கவேண்டும் அல்லாஹ்வினால் அங்கீகாரம் செய்யப்பட்ட திருநாவினால் நம்முடைய வாழ்வின் வழிகாட்டுதல் வெளியாகுவதாக பூரணமாக நம்பு! இன்னும் அதை ஏற்று செயல்படுத்தும் வண்ணம் மறைவான புறத்திலிருந்து நம்மை நோக்கி அறிவிப்பு வருவதாகவும் எண்ணவேண்டும். செய்குடைய திரு முன் சப்தமிட்டு பேசுவது மரியாதைக் குறைவான செயலாகும். செய்கிடம் அளவோடு உரையாடுங்கள் வள வளவென்று அதிகம் பேசுவதினால் அவர்களைப் பற்றியுள்ள மரியாதை உள்ளத்தை விட்டும் நீங்கி விடுகிறது அதன் மூலம் ஃபைஜான் துண்டித்து விடும் (ஞானம் தடைப்படும்) அவர்களின் சன்னிதானத்தில் அவர்கள் விருப்பினால் அன்றி சிரிக்கவும் கூடாது. செய்குடன் பேச விருப்பினால் தீனுடைய பேச்சாயினும் துன்யா உடைய பேச்சாயினும் செய்கு அவர்கள் கேட்ககூடிய சூழ்நிலையிலும் ஒய்விலும் இருக்கின்றார்களா? என்பதை கவனிக்க வேண்டும். உங்களுடைய ரகசியங்களை அல்லாஹ்வால் ஹிபத்தாக கொடுக்கப்பட்டவைகளை அற்புதங்களை செய்கிடம் மறைக்க கூடாது ஏனெனில் அவைகளை செய்கிடம் கொண்டுவருவதில் நன்மை உண்டாக வழியுண்டு.
செய்குடைய வாய்மொழியை பிறருக்கு அறிவிக்கும் பொழுது அவர்க்கு புரியும்படி தெளிவாகவும் விரிவாகவும் கூறவும் உங்களின் விளக்கக்குறைவினால் செய்கை பற்றி தப்பு கருத்து உருவாகாமல் பேணுக!   
நன்றி---சாதகனின் பண்புகள்.
  தொகுப்பு----- அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான்

Monday, 21 November 2011

செய்கு நாயகத்திடம்.......


நம் வாழ்வில் நல்ல முன்னேற்றமூம் நல்ல நிலமையும் உண்டாக வேண்டுமானால் செய்கு நாயகத்திடம் அளவில்லா அன்பு கொள்ள வேண்டும் எந்த அளவுக்கு பிரியம் வைக்கின்றோமோ அந்த அளவீற்க்கு அவர்களீன் தர்பியத்தடைய(இஸ்திஃதாத்) தயாராகும் நிலை "சலாஹியத்" அதிகமாகும்.
இவ்வுலகில் நமக்கு கிடைத்துல்ல நன்மை தீமை,பணம் காசு, கண்ணீயம்  மரியாதைகள் இன்னும் மறுமையுடைய வெற்றிக்குரிய வழிகள் ஆகிய அனைத்தும் செய்குடைய நட்பு மற்றும் ஊழியத்தால் தான் நமக்கு கிடைத்தது என்று முழுமையாக நம்பவேண்டும், நினைவில் கொள்க...செய்கு உடைய சன்னிதானத்தில் தான் குர்பானியாக வேண்டும், அல்லது நமது லட்சியத்தை நிறைவேற்றி வைப்பவர் செய்கு அவர்கள் தாம் என்று  நம் பிக்கை கொண்டாலும் அந்த நம்பிக்கை வலுவானது தான் என்பதற்கு அடையாளாம் யாதெனில் அவர் நம்மை தூரமக்கினாலும் சரி, விரட்டினாலும் சரி, அவரைப்பிரியாமலும் அவநம்பிக்கை கொள்ளாமலும் இருப்பதாகும்

  நன்றி---சாதகனின் பண்புகள்.
  தொகுப்பு----- அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி

Sunday, 20 November 2011

ஈமான்


அந்த ஊரில் ஒரு ஏழை மனிதர் ஈமான் தாரி, அதே ஊரில் ஒரு செல்வந்தர் வருடத்திற்க்கு ஓரு முறை பள்ளீவாசல் பக்கம் திரும்பிபார்பவர், இந்த வறீயவர் ஐந்து நேரமும் அல்லாஹ்வை வணங்கி தூவா செய்கின்றார், நான் உன்னை மறக்காமல் உனக்காக உனது கூற்றூக்கு அடிபணீத்து வருகின்றேன்....உன் சிந்தனை இன்றீ வாழ்ந்து வருபவர் மிக்க செல்வத்துடன் வாழ்த்து வருகின்றர் என் நிலை ஏன் இப்படி?
மனிதரின் பலஹினமான ஈமான் இது, அந்த ஏழ்மை நிலை மாறீனால் அவர் அல்லாஹ்வை மறக்ககூடும் என்பதால்....மேலும் அவர் அல்லாஹ்வின் சிந்தனையுடன் உலகில் வாழ்வதை அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கலாம்....  செல்வந்தர்க்கு இந்த உலகில் தரப்பட்டு, நிலையான உலகில் வேதனை தரப்படலாம் அல்லாஹ்வின் நாட்டம் என்ன என்பதை யாரும் அறீயா முடியாது ஏனவே அல்லாஹ் நமக்கு எதை கொடுத்து வாழவைத்துல்லான் என்பதெனை அறீந்து கொடுதற்கே அல்ஹம்துலில்லாஹ் என்று நன்றீ கூறீ வாழ்வது சிறந்த நெறீயாகும்.

Saturday, 19 November 2011

Miracle of Quran - Where two salty _ sweet seas meet - Between them is barrier - YouTube



தனது அடிமைகளின் தேவைகள் என்ன என்பது அல்லாஹ்விற்க்கு முற்றிலும் தெரித்த விசயம், இருப்பினும் என்னிடம் கேளூங்கள் என்று கூற காரணம் என்ன?
 தனது அடிமை தன்னிடம் கேட்பதை அவன் ரசிக்கின்றான்.
                                                (ஹலில் ஹக்கிமி)

Friday, 18 November 2011

நாம் முஸ்லிம்களாக இருக்கின்றோம்இன்னும் முமின் ஆக ஆகவில்லை...... காரணம் அல்லாஹ் என்றால் நடுக்கம் வரவில்லை                             
 (அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)

அல்லாஹ் ஒருவன், தன்  தேவை அற்றவன்அல்லாஹ் அர்ஷ்சில் இருப்பது உண்மை, இருப்பினும் நமது பிடரி நரம்பை விட மிக  அருகில் இருக்கின்றேன். ஏன்று ஃகுரான் ஷரிபில் கூறீய பின்னும் அல்லாஹ்வை தூரத்தில் வைத்து பார்ப்பது ஏன்?          
 (அல்லாஹ்வின் அடிமைஅல்லாஹ்வை தேடும் மானிடன்ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)


   
      

லா இலஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசுலில்லாஹி. வணக்கத்திற்க்கு உரியவன் அல்லாஹ்வை தவிர யாரும்மில்லை முஹம்மத்(சல்) அலைஹிவசல்லம் அவனின் தீருத்தூதர் ஆவார்கள்வனக்கத்திற்குறீய நாயன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை...... அல்லாஹ்வை  வணங்கும் நோக்கம் அவனுக்கு நன்றீ சொல்வது, நாம் அவனுக்கு நன்றீ செலுத்தும் நோக்கம் ஏன்? சதாசர்வ காலமும் நமது தேவைகள் அனைத்தயும் பூர்த்தி செய்பவன் அவனை தவிர யாரும்மில்லை.... ஒவ்வொரு நிமிடமும் நாம் செயல்படுவது அவனைக்கொண்டு என்பதனை உணர்த்து நன்றீ செலுத்தால் ஆவசியம்.....

(அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)

நாம் இந்த உலகில் வாழ்வதன் நோக்கம் என்ன?......ஒன்று மட்டுமே.... அல்லாஹ்குவை அறீத்து வாழ்வது. நம்மையும் பிற வாஸ்துகளயும் அல்லாஹ் படைத்ததன் நோக்கமும் அவனை அறீவதற்காக.... லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மத்துர் ரசுலில்லாஹி ஏன்ற திரு கலிமா நாம் கல்பில் பொக்கிசமாக புதைத்து இருக்கும் போது அதனை விளக்காமல் இந்த உலகில் வாழ்வதில் பயன் ஒன்றூம் இல்லை. (வெண்னையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவனென்)                                
(அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி)
  



                      



Friday, 4 November 2011

Search Allah, Reach Allah, Love Allah, Live with Allah, sacrifice yourself for Allah, Unless you search you could not reach, Unless you reach you could not love, Unless you love you could not live with him, Unless you live with him, you could not sacrifice yourself for Allah (Faizee sha noori - (rali)