உனது தொழுகை, நோன்பு போன்ற வெளிப் படையான இபாதத்துகளில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டாலும் அல்லது தவறுதலாக சில குற்றங்கள் உன்னில் நிகழ்ந்து விட்டாலும் அல்லாஹுத்தஆலாவின் பேரில் ஆதரவை முறித்து விடாதே, அவ்விதம் ஆசை முறிவது, அமல்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாய் என்றும் அதுவே நம்மைக் காப்பாற்றுமென்றும் எண்ணுகின்றாய் என்பதற்குரிய அறிகுறியாயிருக்கின்றன. இவ்விதம் எண்ணுவது ஆபிதீன்களின் ஆரம்ப நிலையிலுள்ளவர்களின் பழக்கமாகும்.
அல்லாஹுத்தஆலாவை அறிந்தவர் (ஆரிபீன்)கள் தன்னில் அதிகமதிகம் இபாதத்துகளேற்பட்டாலும், அல்லது தவறுகள் நடந்தபோதிலும் அல்லாஹுத்தஆலாவின் கற்பனை நடந்தது என்றே எண்ணிக் கொள்வார்கள். (அதற்காக) சந்தோஷமோ, கவலையோ கொள்வதில்லை, எப்போதும் அல்லாஹு என்ற தியானக் கடலில் மூழ்கி இருப்பார்கள். தமக்கு ஒரு சக்தி இருப்பதாக நினைக்கமாட்டார்கள். (ஏனெனில் உண்மையில் யாவற்றையும் செய்பவன் அல்லாஹுதான் என்று அவர்கள் கண்டு கொண்டார்கள், தான் அவனது செய்கை வெளியாவதற்கு ஒரு (மள்ஹர்) ஸ்தானமேயன்றி வேறில்லையாகையால் ஒரு இபாதத்து புரிவது அவர்களுக்கு ஆசையையே, ஒரு தவறுதல் இழைப்பது பயத்தையோ, அதிகமாக்காது, "லா ஹெளல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹி" என்றே இருப்பார்கள்.
நன்றி; நூல்- மெய் வழி.
No comments:
Post a Comment