அஸ்ஸலாமு அலைக்கும்

Tuesday, 27 November 2012

Sarkar Faizee Sha Noori

A heartrending du'a (prayer) in Tamil by Shaikh Faizeesha Noori Qibla on the occasion of Shabe Baraath (Nisfu Shaban - 15th night of Shaban). A comprehensive du'a seeking forgiveness from Allah, happy life in this life and in the hereafter. 13 minutes worth listening - again and again.

Tuesday, 31 January 2012

அகக்கண் குருடாகி இருப்பதின் அடையாளமாயுமிருக்கும்.


அல்லாஹுத்த ஆலா உனக்காப் பிணையேற்றுக் கொண்ட இரணம் போன்றவற்றில் நீ முயற்சி செய்து கொண்டு, உன்னிடத்தில் அவன் கேட்டுக் கொண்ட தொழுகை,நோன்பு, திக்ரு, பிக்ரு போன்ற இபாதத்துகளில் நீ குறை செய்வது உன்னுடைய அகப்பார்வை மங்கிவிட்டதன் அடையளாமாகும். "என்னை (யறிந்து) வணங்குவதற்கல்லாது மனித வர்க்கத்தையும், ஜின் வர்க்கத்தையும் நான் படைக்கவில்லை" என்றும் "உலக உயிரினங்களின் இரணம் அல்லாஹ்வின் வசம் இருக்கிறதென்றும்" அவன் கூறுகிறான். அவ்விதமிருக்க நாம் இரணங்களுக்கு முயற்சித்து வணக்கங்களில் அசட்டையாயிருப்பது, அல்லாஹுத்த ஆலாவின் மீதும் அவனது வசனமாகிய குரானின் மீதும் உண்மையான நம்பிக்கை இல்லை என்ற அத்தாட்சியாகும். இன்னும் அதனை சிந்திக்கும் அகக்கண் குருடாகி இருப்பதின் அடையாளமாயுமிருக்கும்.
நன்றி-- நூல்--மெய்வழி (ஹிகம்)

Sunday, 29 January 2012

அல்லாஹுத்த ஆலா உன்னை ஒரு வேலையில் ஏற்படுத்தியிருக்கும் போது


அல்லாஹுத்த ஆலா உன்னை ஒரு வேலையில் ஏற்படுத்தியிருக்கும் போது நீயாகவே அந்த தொழிலை விட்டுவிட நினைப்பது உன்னில் மறைந்திருக்கும் பேராசையாகும், ஏனென்றால் உனது ஏஜமானகிய அல்லாஹுத்த ஆலாவின் ஏற்பாட்டை நீ பொருந்தாமல் உனது (நப்ஸின்) எண்ணப்படி நடக்கவிரும்புகிறாய், (எனவே) அவ்விதம் எண்ணுவதின் வெளிப்படையான நோக்கம், அல்லாஹுத்த ஆலாவின் தியாகத்திலேயே இருந்து அவனோடு முடுகவேண்டு மென்பதாகவிருந்தாலும் உண்மையில் அதன் நோக்கம் நீ பெரிய மனிதன் அவ்லியாகளின் குணம் பெற்றவன், என ஜனங்களில் பிரசித்தி பெற்று மனிதர்கள் உன்னை நோக்கி வர வேண்டும்(என்பதும்) எந்த வகையிலாவது மதிப்பு வேண்டும் என்பதுமேயாகும், இவ்வித எண்ணம் கொள்வது (முரிதுகளை) அல்லாஹ் வழியில் நடப்பவர்களை கொல்லும் நஞ்சாயிருக்குமென பெரியோர்கள் கூறுகிறார்கள் மேலும் ஜனங்கள் உன்னை விரும்பி வரப்போகவிருந்தால் உனது நித்திய இபாதத்திற்கு இடையுறு ஏற்பட்டு அவைகளை விட வேண்டியதாய் ஏற்படும், இதனால் நீ சாதாரண மனிதர்களிலும் மோசமானவனாக ஆகிவிடுவாய்.
அல்லாஹுதஆலா உன்னை தொழிலை விட்டும் ஒழித்து வைத்திருக்க, நீ தொழிலை விரும்புவது மேலான மனோ உறுதி யென்ற உச்ச நிலையை விட்டும் இறங்குவதாயிருக்கும். ஏனெனில் நீ உலக தொழிலை விட்டும் விலகி அல்லாஹுத ஆலாவைக் கொண்டு பொருந்தி அவன் ஊழியத்தில் ஈடுபட்டு அவனைக் கொண்டும்  கொழுகி இன்பம் பெற்றிருந்தாய், இப்போது அவனை விட்டும் விலகி உலக மக்களோடு கலந்து (கல்கு) சிருஷ்டிகள் என்ற உலகத்தோடு கொழிகிவிட நாடுகிறாய், ஆகையால் உண்மையனா ஸாலிக்காக இருந்தால் அல்லாஹுத ஆலா தன்னை எவ்விதமாக வைத்திருக்கின்றானோ அதை அன்போடு ஏற்று பொருந்தி இருக்கவேண்டும், தானாகவே வேறொன்றை விரும்பவும் புறக்கணிக்கவும் கூடாது, அவ்வாறு செய்வதால் அவன் ஏற்பாட்டைப் பொருந்தாத நன்றி கெட்டவனாக ஆகி விடுகின்றான். அல்லாஹ் நம்மை காப்பானாக.
நன்றி--- நூல் (ஹிகம்) மெய்வழி
 தொகுப்பு--- ஹலில் ரஹ்மான் ஹக்கீமி.




Thursday, 19 January 2012

அல்லாஹுத்தஆலாவை அறிந்தவர் (ஆரிபீன்)கள்


உனது தொழுகை, நோன்பு போன்ற வெளிப் படையான இபாதத்துகளில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டாலும் அல்லது தவறுதலாக சில குற்றங்கள் உன்னில் நிகழ்ந்து விட்டாலும் அல்லாஹுத்தஆலாவின் பேரில் ஆதரவை முறித்து விடாதே, அவ்விதம் ஆசை முறிவது, அமல்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாய் என்றும் அதுவே நம்மைக் காப்பாற்றுமென்றும் எண்ணுகின்றாய் என்பதற்குரிய அறிகுறியாயிருக்கின்றன. இவ்விதம் எண்ணுவது ஆபிதீன்களின் ஆரம்ப நிலையிலுள்ளவர்களின் பழக்கமாகும்.

அல்லாஹுத்தஆலாவை அறிந்தவர் (ஆரிபீன்)கள் தன்னில் அதிகமதிகம் இபாதத்துகளேற்பட்டாலும், அல்லது தவறுகள் நடந்தபோதிலும் அல்லாஹுத்தஆலாவின் கற்பனை நடந்தது என்றே எண்ணிக் கொள்வார்கள். (அதற்காக) சந்தோஷமோ, கவலையோ கொள்வதில்லை, எப்போதும் அல்லாஹு என்ற தியானக் கடலில் மூழ்கி இருப்பார்கள். தமக்கு ஒரு சக்தி இருப்பதாக நினைக்கமாட்டார்கள். (ஏனெனில் உண்மையில் யாவற்றையும் செய்பவன் அல்லாஹுதான் என்று அவர்கள் கண்டு கொண்டார்கள், தான் அவனது செய்கை வெளியாவதற்கு ஒரு (மள்ஹர்) ஸ்தானமேயன்றி வேறில்லையாகையால் ஒரு இபாதத்து புரிவது அவர்களுக்கு ஆசையையே, ஒரு தவறுதல் இழைப்பது பயத்தையோ, அதிகமாக்காது, "லா ஹெளல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹி" என்றே இருப்பார்கள்.

நன்றி; நூல்- மெய் வழி.



Sunday, 15 January 2012

இலாஹ்


இலாஹ்

வணக்கத்திற்குரியவன், (மஹ்பூத்) அல்லா ஒருவன் மட்டுமே வணக்கத்திற்க்குரியவன், படைப்புக்கள் ஏதுவுமே வணக்கத்திற்க்குதகுதியுடையவையல்ல, ஏதுஒன்று,  தன்தேவையற்றதாக இருந்துபிறவற்றின் தேவைகளை பூர்த்திசெய்கின்றதோ அதுஒன்றுமட்டுமே வணக்கத்திற்க்கு தகுதியுடையதாகும். இந்த தகுதி அல்லாஹ்ஒருவனுக்குமட்டுமேஉண்டு, அவனேஅனைத்துபடைப்புக்களின் தேவைகளையும்பூர்த்திசெய்யக்கூடியவனாகஇருக்கின்றான், ஆனால் அவனுக்கு எந்ததேவையும்இல்லை, இதுவேசாத்தியமானநிலை, இலாஹ் உடையவிஷயத்தில்செய்யப்படும்ஷிர்க்என்ன? இதில்இணைவைத்தல்என்ன? அல்லாஹ்அல்லாதவைகள் அதாவதுஅல்லாஹ்வைக்கொண்டுதான்அனைத்தும்நடந்தது,  நடக்கின்றது, நடக்கும் என்ற சிந்தனை உணர்வின்றி அல்லாஹ்வை  மறந்தவர்களாக கேட்டேன், பார்த்தேன், சொன்னேன், செய்தேன், கேட்கப்பட்டது, பார்க்கபட்டது, சொல்லபட்டது, செய்யபட்டது, இது போல் அனைத்தும் ஷிர்க் ஆகும். வெளிப்படையாக பார்க்கும் போது படைப்புக்கள் ஒன்றுக்கொன்று தேவைகளை பூர்த்தி செய்வதாக தோன்றும், ஆனால் இது உண்மை நிலை அல்ல, படைப்புகளின் முலம் அல்லாஹ்தான் தேவைகளை பூர்த்தி செய்கின்றான் என்று விளங்க வேண்டும். எந்த படைப்பும் சுயமாக தனது சுயதேவைகளையும் பிறவற்றின் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாதவை, மேலும் தனக்கென தேவையுடையவை, உதாரணமாக- நமக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவரிடம் செல்கின்றோம் நமது தேவை உடல் நிலை குணமாக வேண்டும், மருத்துவர் சிகிச்சை அளிக்கின்றார் அதன் முலம் நாம் நலமாகிவிட்டோம் இந்த இடத்தில் நமது தேவை மருந்துவரைக் கொண்டு நமது தேவை பூர்த்தி அடைந்தது எனவே மருத்துவர் இலாஹ்வாக முடியுமா? இல்லை முடியாது காரணம் நமக்கு சிகிச்சை அளிப்பதான் முலம் அவரின் தேவைக்கான பணத்தை அவர் அடைகின்றார், நம் தேவையினை பூர்த்தி செய்வதான் முலம் அவரின் தேவையும் பூர்த்தி அடைகின்றது, எனவே தேவையுடைய ஒன்று இலாஹ்வாக முடியாது, மருத்துவரின் முலம் அல்லாஹ்தான் தேவைகளை பூர்த்தி செய்தான் என்ற உண்மை நிலையினை அறிவதன் முலமே அல்லாஹ் மட்டுமே இலாஹ் என அறிந்து உணர்வு பூர்வமாக அல்லாஹ்விற்க்கு நன்றி செலுத்துவதும் சதாவும் அவனை ஞாபகம் செய்வதும் நம்மீது கடமையாகின்றது.
கண்ணியமிக்கஷெய்ஃகுஹக்கீமீஷாபைஃஜிஅவர்களின்ஃபைஜானைக்கொண்டு--ஹலில்ரஹ்மான்ஹக்கீமீ

Sunday, 1 January 2012

மய்யத்தின் நிலை சிலமணி நேரமே,


ராஜ திக்ரு பற்றி எனது வலைதளத்தில் வெளியான செய்தி பற்றி, "இது எப்படிங்க?" என்பன போன்ற சில சந்தேகங்களை அன்பர்கள் கேட்டிருந்தனர், மிக எளிமையான சிறிய விளக்கம் தருகின்றேன்,ஒன்றை நாம் அடிக்கடி சொல்லிக் கொண்டுடியிருந்தால் அதனை நமது மனம் எடுத்துக் கொள்ளும்,அதாவது பதியப்பட்டுவிடும், அதன் பின் வாயை முடிக்கொண்டலும் மனம் சொல்லிக் கொண்டிக்கும், இதுவரை தாங்களுக்கு விளங்கும், தாங்களின் சந்தேகம்  ருஹு எப்படி திக்ரு செய்யும் எனும் இடத்தில் எனில், ஒர் உதாரணம்--தாங்களின் அருகில் பாம்பு வந்துவிட்டது உடன் பயம் வந்துவிடும், வாய் பாம்பு, பாம்பு என பிதற்ற ஆரம்பித்து விடும், பின் கல்பில் அந்த பயம் கவ்விக்கொள்ளும், மனம் பயத்தில் துடிக்க ஆரம்பித்துவிடும், அதன் பின் கல்பில் உண்டான பயம் ருஹில் அடையும், இப்போது உடல் பூராவும் ருஹு உள்ளதால் முழூஉடலும் பயத்தால் நடுங்கும், இந்த விளக்கத்தை வைத்து விளங்கி கொள்வீர்கள், (வாயால் கூறும் திக்ரு, கல்புக்கும், ருஹுக்கும் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும்)
அடுத்த சந்தேகம் மரணத்திற்கு பின் எப்படி சாலாமத்தாக இருப்பார்கள் எனும் விஷயத்தில் எனில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், மவ்திற்க்கு பின் மீண்டும் நாம் ஏழுப்படுவோம், அதுவும் சிலமணி நேரங்களில் கபரில் வைத்த உடன் எழுப்பபட்டு மலக்குகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும், அதன்பின்  நன்மராயம் கூறப்பட்டால், சுகத்துடன் கபரில் உறங்குவார்கள், நன்மராயம் கூறப்படவில்லை என்றால் கபரின் வேதனையினை அனுபவிப்பார்கள், இந்த இடத்தில் கவனிக்க  வேண்டியது, மய்யத்தின் நிலை சிலமணி நேரமே, மனிதன் மரணிக்கும் தருவாயில் எதை கூறியவண்ணம் மரணிக்கின்றாரோ, அதை கூறியவண்ணமே எழுவார். மீண்டும் மரணிக்கபடுவதில்லை, எனவே  திக்ருடன் மரணிக்கும் மனிதர் திக்ருடனே இருப்பார்கள், மீண்டும் எழும்போதும் திக்ருடனே எழுவர்கள்இப்பொழுது தாங்கள் விளங்கி இருப்பீர்கள். மேலும் தாங்களுக்கு சந்தேகம்  எனில் மேலும் விளக்கம் பெற இன்ஷா அல்லாஹ் நேரில் நாம் சந்திக்கும் பாக்கியத்தை அல்லாஹ் தரும்பட்சத்தில்
கண்ணியமிக்க ஷெய்ஃகு ஹக்கீமீ ஷா பைஃஜி அவர்களின் ஃபைஜானைக் கொண்டு--ஹலில் ரஹ்மான் ஹக்கீமீ